Business

அதிக வட்டி.. நல்ல சேமிப்பு.. முதியோருக்கான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு அதிக வட்டி தரும் 5 வங்கிகள்!

அதிக வட்டி.. நல்ல சேமிப்பு.. முதியோருக்கான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு அதிக வட்டி தரும் 5 வங்கிகள்!


ஃபிக்சட் டெபாசிட் முதலீடு என்பது சமீப காலமாக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில், ஃபிக்சட் டெபாசிட் சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி தரும் வங்கிகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

  • 2-MIN READ
    | News18 Tamil
    Tamil Nadu
    Last Updated :

019

பெரும்பாலான முதலீட்டாளர்கள் நிலையான ரிட்டன்களை பெறுவதற்காக ஃபிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்வதை தேர்வு செய்கின்றனர். அனைத்து ஆப்ஷன்களுக்கு மத்தியில் மிகவும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான முதலீடாக ஃபிக்சட் டெபாசிட் அமைகிறது.

விளம்பரம்

029

ஃபிக்சட் டெபாசிட்களுக்கு அதிக வட்டி விகிதங்களை பெற நினைக்கும் நபர்கள் அதனை தங்களது வயதான பெற்றோர்களின் பெயரில் லாக் செய்து வைப்பதன் மூலமாக பலனடையலாம். ஏனெனில் வங்கிகள் சீனியர் சிட்டிசன்களுக்கு 50 பேசிஸ் பாய்ண்டுகள் அதிக வட்டி விகிதத்தை வழங்குகின்றன.

விளம்பரம்

039

இந்த பதிவில் பல்வேறு கால அளவு கொண்ட ஃபிக்சட் டெபாசிட்களுக்கு சீனியர் சிட்டிசன்களுக்கு முக்கியமான வங்கிகள் வழங்கக்கூடிய அதிக வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.

விளம்பரம்

049

HDFC வங்கி :  HDFC வங்கி சீனியர் சிட்டிசன்களுக்கு ஒரு வருடம் முதல் 15 மாதங்களுக்கான டெபாசிட்களுக்கு 7.10 சதவீத வட்டி வழங்குகிறது. இதுவே 15 முதல் 18 மாத கால ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 7.60% வட்டி கொடுக்கப்படுகிறது.18 மாதங்கள் முதல் 2 வருடங்கள் 11 மாதங்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 7.5 சதவீதம்.

விளம்பரம்

059

நீண்ட கால அளவுக்கு தனியார் வங்கிகள் அதிக வட்டி விகிதங்களை நிர்ணயிக்கின்றன. 5 முதல் 10 வருடங்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 7.75% அதிக வட்டி கொடுக்கப்படுகிறது. 4 வருடங்கள் 7 மாதங்கள் முதல் 55 மாதங்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 7.7 சதவீத வட்டி தரப்படுகிறது. எனவே ஒரு வருடம் மற்றும் அதற்கும் மேற்பட்ட கால அளவு கொண்ட ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 7.1 முதல் 7.75 சதவீதம் வரை உள்ளது.

விளம்பரம்

069

ICICI வங்கி : ICICI வங்கியானது கால அளவை பொறுத்து 7 முதல் 7.25 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தை வழங்குகிறது. ஒரு வருடம் முதல் 15 மாதங்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 7.25% வட்டியும், 15 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 7.0 முதல் 7.5 சதவீத வட்டியும், நீண்ட கால அளவு கொண்ட டெபாசிட்களுக்கு 7 சதவீத வட்டியும் கொடுக்கப்படுகிறது.

விளம்பரம்

079

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா :  SBI பல்வேறு கால அளவுகளுக்கு 7.3% முதல் 7.5% வரையிலான வட்டி விகிதத்தை நிர்ணயித்துள்ளது. ஒரு வருடம் முதல் 2 வருடங்களுக்கும் குறைவான கால அளவுக்கு 7.30 சதவீத வட்டியும், 2 முதல் 3 வருடங்களுக்கு 7.5 சதவீத வட்டியும், 3 முதல் 5 வருடங்களுக்கு 7.25% வட்டியும், 5 வருடங்களுக்கு மேற்பட்ட கால அளவு கொண்ட ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 7.5% வட்டியும் தரப்படுகிறது. சீனியர் சிட்டிசன்களுக்கான அம்ரித் காலாஷ் என்ற 400 நாட்கள் சிறப்பு திட்டத்தின் கீழ் 7.6 சதவீத அதிக வட்டி கொடுக்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கான கடைசி தேதி மார்ச் 31.

விளம்பரம்

089

பேங்க் ஆஃப் பரோடா : பேங்க் ஆஃப் பரோடா கால அளவின் அடிப்படையில் ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 7.35 சதவீதம் முதல் 7.75 சதவீதம் வரையிலான வட்டி கொடுக்கிறது. 1 முதல் 2 வருடங்களுக்கு சீனியர் சிட்டிசன்களுக்கு 7.35% வட்டி கொடுக்கப்படுகிறது. 2 முதல் 3 வருடங்கள் வரையிலான கால அளவுக்கு 7.75 சதவீத வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பரோடா தைரங்கா பிளஸ் டெபாசிட் திட்டத்தின் கீழ் 399 டெபாசிட்களுக்கு பேங்க் ஆஃப் பரோடா 7.65 சதவீத வட்டியை கொடுக்கிறது.

விளம்பரம்

099

கோடக் மகேந்திரா வங்கி :  இந்த வங்கி கால அளவின் அடிப்படையில் ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 6.7 சதவீதம் முதல் 7.8% வரையிலான வட்டியை தருகிறது. ஒரு வருட டெபாசிட்களுக்கு 7.6 சதவீத வட்டியும் 390 நாட்களுக்கு 7.65 சதவீத வட்டியும், 23 மாதங்கள் முதல் 2 வருடங்களுக்கும் குறைவான டெபாசிட்களுக்கு 7.8% வட்டியும், 2 முதல் 3 வருட டெபாசிட்களுக்கு 7.65 சதவீத வட்டியும் கொடுக்கப்படுகிறது.

விளம்பரம்
  • First Published :



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *