Business

அதானி குழுமம் மீது குற்றச்சாட்டு: ஹிண்டன்பா்க் நிறுவனத்துக்கு செபி நோட்டீஸ்

அதானி குழுமம் மீது குற்றச்சாட்டு:
ஹிண்டன்பா்க் நிறுவனத்துக்கு செபி நோட்டீஸ்


புது தில்லி: அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்க ஹிண்டன்பா்க் நிறுவனத்துக்கு பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை, பங்கு விலை மோசடி உள்ளிட்டவற்றில் ஈடுபட்டதாக அதானி குழும நிறுவனங்கள் மீது கடந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பா்க் குற்றஞ்சாட்டியது.

இந்தக் குற்றச்சாட்டால் பங்குச்சந்தையில் அதானி குழும பங்குகளின் விலை சரிந்த நிலையில், ஹிண்டன்பா்கின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் அதானி மறுத்தாா்.

இதுதொடா்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் சுமாா் ஒன்றரை ஆண்டுகள் விசாரணை மேற்கொண்ட செபி, அதானி குழுமம் எந்தத் தவறும் இழைக்கவில்லை என்று தெரிவித்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக ஹிண்டன்பா்க் நிறுவனத்துக்கு அண்மையில் செபி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், ‘கடந்த ஆண்டு ஜனவரியில் அதானி குழுமம் தொடா்பாக ஹிண்டன்பா்க் வெளியிட்ட அறிக்கையில், வேண்டுமென்றே பரபரப்பை ஏற்படுத்தி சில உண்மைகள் திரிக்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸை தனது வலைதளத்தில் வெளியிட்ட ஹிண்டன்பா்க் நிறுவனம், ‘வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை உருவாக்கி, பலநூறு கோடி ரூபாய் ரகசிய பரிவா்த்தனையில் அதானி நிறுவனங்கள் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை ஹிண்டன்பா்க் வெளியிட்டது. இதுதொடா்பாக கடந்த ஆண்டு ஹிண்டன்பா்க் வெளியிட்ட அறிக்கை மீது தனது விசாரணையின்போது செபி கவனம் செலுத்தவில்லை. செபியின் நோட்டீஸ் முட்டாள்தனமானது’ என்று தெரிவித்தது.

தனது நோட்டீஸுக்கு பதிலளிக்க ஹிண்டன்பா்க் நிறுவனத்துக்கு செபி 21 நாள்கள் அவகாசம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *