Business

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாவிலிருந்து 2.6 மில்லியனுக்கும் அதிகமான போஸ்ட்களை நீக்கிய மெட்டா!

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாவிலிருந்து 2.6 மில்லியனுக்கும் அதிகமான போஸ்ட்களை நீக்கிய மெட்டா!


ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா கடந்த டிசம்பரில் இந்தியாவில் கொள்கைகளை மீறும் உள்ளடக்கங்கள் (content violating policies) மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ன் கீழ், 5 மில்லியனுக்கும் அதிகமான யூஸர்களை கொண்ட பெரிய டிஜிட்டல் மற்றும் சோஷியல் மீடியா பிளாட்ஃபார்ம்கள் மாதாந்திர இணக்க அறிக்கைகளை (monthly compliance) வெளியிட வேண்டும். அந்த வகையில் தான் பாலிசிகளை மீறும் போஸ்ட்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி மெட்டா அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 2023 டிசம்பரில் ஃபேஸ்புக்கில் இருந்து சுமார் 19.8 மில்லியனுக்கும் அதிகமான கன்டென்ட்ஸ்களையும், இன்ஸ்டாகிராமில் இருந்து சுமார் 6.2 மில்லியனுக்கும் அதிகமான கன்டென்ட்ஸ்களையும் என மொத்தம் சுமார் 26 மில்லியன் போஸ்ட்களை நீக்கி இருப்பதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

Indian grievance mechanism மூலம் மொத்தம் 44,332 பேர் ஃபேஸ்புக்கிலும், 19,750 பேர் இன்ஸ்டாவிலும் ரிப்போர்ட் செய்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது. மேலும் ஃபேஸ்புக்கை பொறுத்தவரை 33,072 ரிப்போர்ட்ஸ்களில் யூஸர்கள் தங்கள் பிரச்சனைகளை தீர்க்க டூல்ஸ்களை வழங்கியதாக மெட்டா கூறி உள்ளது. குறிப்பிட்ட மீறல்களுக்கான கன்டென்ட்டை ரிப்போர்ட் செய்ய முன்பே நிறுவப்பட்ட சேனல்கள், அவற்றின் தரவைப் பதிவிறக்கக்கூடிய self-remediation ஃப்ளோஸ் , அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழிகள் போன்ற பல இதில் அடங்கும்.

விளம்பரம்

சிறப்பு மறுஆய்வு தேவைப்பட்ட 11,260 ரிப்போர்ட்களில், 6,578 மீது மெட்டா நடவடிக்கை எடுத்தது, மீதமுள்ள 4,682 மதிப்பாய்வு செய்யப்பட்டன என்று Meta தனது மாதாந்திர அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது. அதே போல இன்ஸ்டாகிராமைப் பொறுத்தவரை, 19,750 ரிப்போர்ட்ஸ்களில் 9,555 புகார்களில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க யூஸர்களுக்கு மெட்டா டூல்ஸ்களை வழங்கியது. சிறப்பு மறுஆய்வு தேவைப்படும் 10,195 ரிப்போர்ட்ஸ்களில் 6,028 மீது மெட்டா மதிப்பாய்வு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் மதிப்பாய்வு செய்யப்பட்ட மீதமுள்ள 4,167 ரிப்போர்ட்ஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

இதையும் படிங்க : கோர விபத்தில் சிக்கிய கார்.. உயிருக்கு போராடியவர்களை காப்பாற்றிய ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்

எங்கள் பாலிசிகளுக்கு எதிராக இருக்கும் கன்டென்ட்ஸ்கள் (போஸ்ட், புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது கமெண்ட்ஸ் போன்றவை) மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த நடவடிக்கைகளில் ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் இருந்து ஒரு கன்டென்டை அகற்றுவது அல்லது சில பார்வையாளர்களுக்கு இடையூறு விளைவிக்கும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை எச்சரிக்கையுடன் மறைப்பது உள்ளிட்டவை அடங்கும் என்று மெட்டா குறிப்பிட்டுள்ளது.

விளம்பரம்

முன்னதாக கடந்த 2023 நவம்பர் மாதத்தில் ஃபேஸ்புக்கில்18.3 மில்லியனுக்கும் அதிகமான கன்டென்ட்ஸ்களையும், இன்ஸ்டாவில் 4.7 மில்லியனுக்கும் அதிகமான கன்டென்ட்ஸ்களயும் மெட்டா நீக்கி நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

சிறந்த வீடியோக்கள்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

  • First Published :



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *