Business

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை திருத்திய ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி: புதிய வட்டியை செக் பண்ணுங்க!

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை திருத்திய ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி: புதிய வட்டியை செக் பண்ணுங்க!


ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி தனது நிலையான வைப்பு (எஃப்டி) வட்டி விகிதங்களை ஜூன் 29, 2024 முதல் திருத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் ரூ.3 கோடி வரையிலான எஃப்.டி-களுக்கு பொருந்தும். மூத்த குடிமக்களுக்கு வங்கி அதிகபட்ச வட்டி விகிதமான 7.75% வழங்குகிறது. தனிநபர்களுக்கு, எஃப்.டிகளில் அதிகபட்ச வட்டி விகிதம் 7.2% வரை கிடைக்கும்.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம்

ஐசிஐசிஐ வங்கி 7 நாள்கள் முதல் 29 நாள்கள் வரை முதிர்ச்சியடையும் எஃப்.டி.களுக்கு 3% வட்டி விகிதத்தை வழங்குகிறது. 30 நாட்கள் முதல் 45 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் எஃப்.டிகள் 3.5% வட்டி விகிதத்தைப் பெறும். 46 நாள்கள் முதல் 60 நாள்கள் வரை முதிர்ச்சியடையும் எஃப்.டிகளுக்கு, வங்கி 4.25% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
61 நாள்கள் முதல் 90 நாள்கள் வரை முதிர்ச்சியடையும் எஃப்.டிகளுக்கு 4.5% வட்டி விகிதம் கிடைக்கும். 91 நாட்கள் முதல் 184 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் எஃப்.டிகளுக்கு 4.75% வட்டி விகிதத்தைப் பெறும். 185 நாட்கள் முதல் 270 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் எஃப்.டிகளுக்கு 5.75% வட்டி விகிதம் கிடைக்கும். 271 நாட்கள் மற்றும் ஒரு வருடத்திற்கும் குறைவாக முதிர்ச்சியடையும் FDகளுக்கு 6% வட்டி விகிதம் கிடைக்கும். ஒரு வருடம் முதல் பதினைந்து மாதங்களுக்குள் முதிர்ச்சியடையும் FDகளுக்கு 6.7% வட்டி விகிதம் கிடைக்கும்.
15 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் எஃப்.டிகளுக்கு 7.2% வட்டி விகிதம் கிடைக்கும். இரண்டு வருடங்கள் ஒரு நாள் முதல் ஐந்து வருடங்கள் வரை முதிர்ச்சியடையும் எஃப்.டிகள் 7% வட்டி விகிதத்தைப் பெறும். ஐந்து வருடங்கள் முதல் பத்து வருடங்கள் வரை முதிர்ச்சியடையும் எஃப்.டிகளுக்கு 6.9% வட்டி விகிதம் கிடைக்கும்.
இந்த வட்டி விகிதங்கள் மூத்தக் குடிமக்களுக்கு 0.50 சதவீதம் அதிகமாக காணப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *