Business

ஃபர்ஸ்ட் க்ரை: FirstCry IPO: விரைவில் ஐபிஓ சந்தைக்கு வரும் ஃபர்ஸ்ட் க்ரை…. செபியின் அனுமதி கிடைக்குமா? – firstcry ipo coming soon, waiting for sebi approval

ஃபர்ஸ்ட் க்ரை: FirstCry IPO: விரைவில் ஐபிஓ சந்தைக்கு வரும் ஃபர்ஸ்ட் க்ரை…. செபியின் அனுமதி கிடைக்குமா? – firstcry ipo coming soon, waiting for sebi approval


குழந்தைகளுக்கான பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்யும் ஃபர்ஸ்ட் க்ரை நிறுவனம் ஐபிஓ வெளியிடுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான ஐபிஓ வெளியிடுவதற்கான வரைவு ஆவணங்களை செபியிடம் ஏற்கனவே சமர்பித்திருந்தது. இந்த நிலையில் செபி புதுப்பிக்கப்பட்ட நிதி ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தெரிவித்திருந்தது.

பர்ஸ்ட் க்ரை நிறுவனம் 2023ம் ஆண்டு முதன் முதலில் தனது வரைவு ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸை (டிஆர்ஹெச்பி) தாக்கல் செய்தது. ஆனால் செபி அந்த ஆவணங்களைத் திருப்பி அனுப்பியது. மேலும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை தெளிவுப்படுத்துமாறும் கூறியிருந்தது.

சுமார் 500 மில்லியன் டாலர் அளவுக்கு ஐபிஓ வெளியிட திட்டம் வைத்திருந்தது. 2023ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி 2022-23 நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ரூ.4,814 கோடி வருவாயை ஈட்டியதாக நிறுவனம் தெரிவித்திருந்தது. அதே காலகட்டத்தில் ரூ.278 கோடி அளவுக்கு நஷ்டம் அடைந்திருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

செபியும் ஃபர்ஸ்ட் க்ரையும் ஒரு மாதத்திற்கும் மேலாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அதற்கு முன்னர் ரெகுலேட்டர் இறுதியாக நிறுவனத்தின் தாக்கல்களை திருப்பி அனுப்பிய நிலையில், ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை தெளிவுப்படுத்த வேண்டுமென்றும் கூறியிருந்தது.

செபி ஆரம்பத்தில் 25 Key Performance Indicatorsகளை கேட்டிருந்தது. ஆனால் பர்ஸ்ட் க்ரை நிறுவனம் 5-6 ஐ மட்டுமே ஆவணத்தில் குறிப்பிட்டிருந்து. பர்ஸ்ட் க்ரை நிறுவனத்தின் Key Performance Indicators களில் அதன் சராசரி ஆர்டர் மதிப்பு, வருடாந்திர பரிவர்த்தனை வாடிக்கையாளர்கள் மற்றும் ஆர்டர்களின் எண்ணிக்கை ஆகியவை அடங்கும். மிகவும் விரிவான KPI களுடன், செபி புதுப்பிக்கப்பட்ட நிதித் தொகுப்பையும் கேட்டுள்ளது.

ஆண்டு அடிப்படையில் ஒப்பீடு கிடைக்காத அதே நேரத்தில், புனேவை தலைமையிடமாக செயல்படும் பர்ஸ்ட் க்ரை 2022-23ம் நிதியாண்டில் ரூ. 5,633 கோடி செயல்பாட்டு வருவாயை ஈட்டியது. அதே ஆண்டில் ரூ. 486 கோடி இழப்பு ஏற்பட்டது.

இதேபோல், 2022-23 நிதியாண்டில் ஃபர்ஸ்ட் க்ரை ரூ. 2,401 கோடி செயல்பாட்டு வருவாயையும், அந்த ஆண்டில் ரூ. 79 கோடி இழப்பையும் சந்தித்துள்ளது. நிறுவனத்தின் விற்பனையில் பெரும்பகுதி ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகிறது. அதாவது 75 சதவீதத்திற்கும் அதிகமான விற்பனை ஆன்லைனில்தான் நடைபெறுகிறது.
இரண்டாம் நிலை பரிவர்த்தனைகள் நடந்த மிக சமீபத்திய சுற்றில், ஃபர்ஸ்ட் க்ரை ரூ. 23,000 கோடி அளவுக்கு மதிப்பீடப்பட்டுள்ளது. இருப்பினும் நிறுவனம் அதன் ஐபிஓவை $3.5-3.75 பில்லியன் மதிப்பில் மதிப்பிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

₹5000 முதலீட்டின் கோடீஸ்வரர் ஆகலாம்.!

எகனாமிக் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் Share Market சமீபத்திய Business News மற்றும் பிரேக்கிங் செய்திகளைப் படிக்கவும்



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *