Business

Tata Motors:டிவிஆர் பங்குகளை டாடா மோட்டார்ஸ் பங்கு உடன் இணைக்க திட்டம்…. ரெக்கார்ட் தேதி அறிவிப்பு….

Tata Motors:டிவிஆர் பங்குகளை டாடா மோட்டார்ஸ் பங்கு உடன் இணைக்க திட்டம்…. ரெக்கார்ட் தேதி அறிவிப்பு….


டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பங்கு மூலதனத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதாவது டாடா மோட்டார்ஸ் அதன் டிவிஆர் டாடா மோட்டார்ஸ் பங்குகளை, டாடா மோட்டார் பங்குடன் இணைக்க உள்ளது. இதற்கான ரெக்கார்ட் தேதி செப்டம்பர் 1 என அறிவிக்கப்பட்டுள்ளது.
2013 நிறுவனம் சட்டம் 230 முதல் 232 வரையிலான பிரிவுகள் மற்றும் பிற பொருந்தக்கூடிய விதிகளின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட இந்தத் திட்டமானது, நிறுவனத்தின் ‘A’ சாதாரண பங்கு மூலதனத்தை ரத்து செய்து, புதிய சாதாரண பங்குகளாக பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது டிவிஆர் டாடா மோட்டார்ஸின் 10 பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 7 பங்குகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதாவது ரூ.2 முகமதிப்பு கொண்ட 7 பங்குகளை பெறுவார்கள்.

இது குறித்து நிறுவனம் தற்போது தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் (NCLT) உத்தரவின் சான்றளிக்கப்பட்ட உண்மையான நகலை மகாராஷ்டிரா நிறுவனங்களின் பதிவாளரிடம் தாக்கல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

‘A’ சாதாரண பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்கள், ரெக்கார்ட் தேதியில் வைத்திருக்கும் அதே முக மதிப்பின் ஒவ்வொரு பத்து ‘A’ சாதாரண பங்குகளுக்கும் ஈடாக, ரூ.2 முகமதிப்பு கொண்ட ஏழு புதிய சாதாரண பங்குகளைப் பெறுவார்கள்.

நிறுவனம் தற்போது தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் (NCLT) உத்தரவின் சான்றளிக்கப்பட்ட உண்மையான நகலை மகாராஷ்டிரா நிறுவனங்களின் பதிவாளரிடம் தாக்கல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை ரூ.1,000 மேல் உள்ளது. ஆனால் டிவிஆர் டாடா மோட்டார்ஸ் பங்கு ரூ.750 என்ற நிலையில் உள்ளது. எனவே முதலீட்டாளர்கள் டாடா மோட்டார்ஸ் பங்கினை நேரடியாக வாங்குவதே சிறப்பாக இருக்கும்.

யாரெல்லாம் ஒரு கோடியை எளிதாக சம்பாதிக்கிறார்கள்!

எகனாமிக் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் Share Market சமீபத்திய Business News மற்றும் பிரேக்கிங் செய்திகளைப் படிக்கவும்



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *