ODI WC 2023 | மழையால் இந்தியா – நெதர்லாந்து பயிற்சி ஆட்டம் ரத்து
திருவனந்தபுரம்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி இந்தியா, நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 5-ம் தேதி தொடங்க உள்ளது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. இந்நிலையில், இந்தியா, நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் இன்று கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இன்று காலை முதலே திருவனந்தபுரத்தில் மழை பெய்துவந்த நிலையில் ஆட்டம் தொடங்கவிருந்த […]
Read More