திருப்பதியில் திருடப்பட்ட 2 வயது சிறுவன் மீட்பு: சென்னை தம்பதியிடம் ஒப்படைத்தது போலீஸ் | Tiirupathi: Kidnapped child nabbed; parents extend thanks to police and media

திருப்பதியில் திருடப்பட்ட 2 வயது சிறுவன் மீட்பு: சென்னை தம்பதியிடம் ஒப்படைத்தது போலீஸ் | Tiirupathi: Kidnapped child nabbed; parents extend thanks to police and media

திருப்பதி: திருப்பதியில் திருடப்பட்ட சென்னை சிறுவன் சில மணி நேரங்களிலேயே பத்திரமாக மீட்கப்பட்டார். இது சிறுவனின் பெற்றோருக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளித்துள்ளது. சிறுவன் மீட்கப்பட்ட நிலையில், காவல் துறைக்கும், ஊடகங்களுக்கும் பெற்றோர் நன்றியைத் தெரிவித்தனர். சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த சந்திரசேகர் – மீனா தம்பதிக்கு 8 வயதில் மோகன் வசந்த், 2 வயதில் அருள் முருகன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சந்திரசேகர் மனைவி மீனா மற்றும் குழந்தைகளுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் […]

Read More
 சாதிவாரி கணக்கெடுப்பு | “சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்க காங்கிரஸ் முயற்சி” – பிரதமர் மோடி விமர்சனம் | ‘Does Congress want to take away minorities’ rights?’: PM’s caste census attack

சாதிவாரி கணக்கெடுப்பு | “சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்க காங்கிரஸ் முயற்சி” – பிரதமர் மோடி விமர்சனம் | ‘Does Congress want to take away minorities’ rights?’: PM’s caste census attack

ராய்ப்பூர்: “சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்க விரும்புகிறதா?” என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுளார். பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, பிஹார் மாநிலத்தில் 63.14 சதவீத மக்கள் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை ஆதரித்து வருகின்றன. குறிப்பாக, காங்கிரஸ் ஆதரிக்கிறது. ஆனால், பாஜக இதனை எதிர்க்கிறது. இந்நிலையில், சத்தீஸ்கரின் ஜக்டால்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய […]

Read More
 உ.பி. சுகாதார தரவரிசை: வாரணாசி முதலிடம் – தமிழரான ஆட்சியர் எஸ்.ராஜலிங்கத்துக்கு குவியும் பாராட்டு | UP cleanliness index: Varanadi Collector A Tamilian by birth hailed for his clean mission

உ.பி. சுகாதார தரவரிசை: வாரணாசி முதலிடம் – தமிழரான ஆட்சியர் எஸ்.ராஜலிங்கத்துக்கு குவியும் பாராட்டு | UP cleanliness index: Varanadi Collector A Tamilian by birth hailed for his clean mission

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் சுகாதார தரவரிசை மாவட்டங்கள் பட்டியலில் மீண்டும் வாரணாசி முதல் இடம் பெற்றுள்ளது. அம்மாவட்ட ஆட்சியர் எஸ்.ராஜலிங்கம்.ஐஏஎஸ் தான் இதற்குக் காரணம் என தமிழரான அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன. பாஜக ஆளும் உ.பி.யில் ஒவ்வொரு வருடமும் அதன் மாவட்டங்களின் சுகாதார தரவரிசை பட்டியலிடப்படுகிறது. இம்மாநிலத்தின் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நிலைகளில் ஆய்வுசெய்து இந்த தேர்வு செய்யப்படுகிறது. இந்த வருடம் வெளியான சுகாதார மாவட்டங்கள் தரவரிசைப் பட்டியலில் மீண்டும் வாரணாசி முதல் இடத்தை பெற்றுள்ளது. இதில், 85 […]

Read More
 “திசைத் திருப்பும் வேலை…” – ‘நியூஸ்கிளிக்’ செய்தியாளர்கள் ‘ரெய்டு’க்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

“திசைத் திருப்பும் வேலை…” – ‘நியூஸ்கிளிக்’ செய்தியாளர்கள் ‘ரெய்டு’க்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

புதுடெல்லி: ‘நியூஸ்கிளிக்’ செய்தியாளர்களின் வீடுகளில் டெல்லி சிறப்பு பிரிவு போலீஸார் சோதனை நடத்திவரும் நிலையில், இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதேவேளையில், ‘யாராவது தவறு செய்திருந்தால், விதிமுறைகளின்படி விசாரணை நடத்த விசாரணை நிறுவனங்களுக்கு சுதந்திரம் உண்டு’ என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் உள்ள ‘நியூஸ்கிளிக்’ செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள், தொடர்புடைய நபர்களின் வீடுகளில் டெல்லி போலீஸார் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஒரே நேரத்தில் […]

Read More
 அக்.10-ம் தேதிக்குள் கனடா தூதரக அதிகாரிகளை திரும்பப்பெற இந்தியா வலியுறுத்தியதாக தகவல் | India tells Canada to withdraw 41 diplomats: report

அக்.10-ம் தேதிக்குள் கனடா தூதரக அதிகாரிகளை திரும்பப்பெற இந்தியா வலியுறுத்தியதாக தகவல் | India tells Canada to withdraw 41 diplomats: report

புதுடெல்லி: வரும் அக்.10-ம் தேதிக்குள் கனடா தனது தூதரக அதிகாரிகளை திரும்பப்பெற வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவைச் சேர்ந்த சீக்கியத் தலைவரான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் 18-ம் தேதி கனடாவில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டை முன்வைத்தார். கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது. மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரை வெளியேற […]

Read More
 மகாராஷ்டிராவின் நான்டெட் அரசு மருத்துவமனையில் 48 மணி நேரத்தில் 31 பேர் உயிரிழப்பு – எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் | 7 More Patients Die At Maharashtra Hospital, 31 Deaths In 48 Hours

மகாராஷ்டிராவின் நான்டெட் அரசு மருத்துவமனையில் 48 மணி நேரத்தில் 31 பேர் உயிரிழப்பு – எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் | 7 More Patients Die At Maharashtra Hospital, 31 Deaths In 48 Hours

மும்பை: மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் 16 குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் உள்ளது ஷங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் நேற்று 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், தற்போது மேலும் 7 பேர் உயிரிழந்ததை அடுத்து இந்த எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 48 மணி […]

Read More
 ஷிமோகாவில் மிலாது நபி ஊர்வலத்தில் மோதல்: 40 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை

ஷிமோகாவில் மிலாது நபி ஊர்வலத்தில் மோதல்: 40 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள ஷிமோகாவில் நடைபெற்ற மிலாது ந‌பி ஊர்வலத்தில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள ராணிகுட்டாவில் கடந்த 28 ஆம் தேதி மிலாது நபி ஊர்வலம் நடைபெறுவதாக இருந்தது. அன்றைய தினம் அங்கு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்வதால், மிலாது நபி ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே நேற்று முன் தினம் அங்கு மிலாது […]

Read More
 பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தேவகவுடாவுக்கு சிக்கல் | Deve Gowda is in trouble because of his alliance with BJP

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தேவகவுடாவுக்கு சிக்கல் | Deve Gowda is in trouble because of his alliance with BJP

பெங்களூரு: வரும் 2024 மக்களவைத் தேர்தலில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ம‌தச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது. பாஜக.வுடன் கூட்டணி வைத்ததால் மஜதவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் என்.எம்.நபி,கட்சியில் இருந்து விலகியுள்ளார். இவரைத் தொடர்ந்து மஜத மாநில துணைத் தலைவர் சையத் சஃபி ஃபுல்லா சையத், முன்னாள் டெல்லி பொறுப்பாளர் முகமது அல்தாஃப், முன்னாள் சிறுபான்மை பிரிவு தலைவர் நசீர் ஹுசைன், முன்னாள் இளைஞர் அணி தலைவர் என்.எம். நூர் ஆகியோர் […]

Read More
 காஷ்மீரின் ரஜோரி, காலாகோட் பகுதிகளில் என்கவுன்ட்டர்: தீவிர தாக்குதலால் பரபரப்பு | Intense counter-terror ops underway in Kalakote area of J&K’s Rajouri

காஷ்மீரின் ரஜோரி, காலாகோட் பகுதிகளில் என்கவுன்ட்டர்: தீவிர தாக்குதலால் பரபரப்பு | Intense counter-terror ops underway in Kalakote area of J&K’s Rajouri

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மற்றும் காலாகோட் பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (திங்கள்) இரவு தொடங்கிய தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து ஜம்முவின் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் லெஃப்டினன்ட் கர்னல் சுனீல் பர்த்வால் கூறுகையில், “தீவிரவாதிகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறோம். இப்போதைக்கு பதுங்கியுள்ள தீவிரவாதிகளுடன் பலத்த சண்டை நடந்து வருகிறது. கடந்த செப்டம்பர் 13 ஆபரேஷனுக்குப் பின்னர் […]

Read More
 மணிப்பூர் விவசாயிகளுக்கு ரூ.38 கோடி இழப்பீடு: மத்திய அரசு வழங்குகிறது | Rs 38 crore compensation to Manipur farmers Central government provides

மணிப்பூர் விவசாயிகளுக்கு ரூ.38 கோடி இழப்பீடு: மத்திய அரசு வழங்குகிறது | Rs 38 crore compensation to Manipur farmers Central government provides

புதுடெல்லி: கடந்த மே 3-ம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி, குக்கி இனத்தைச் சேர்ந்த மக்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறைகளால் இதுவரை 180 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு, மணிப்பூர் விவசாயத்துறை ஆணையர் ஆர்.கே.தினேஷ் திட்டம் ஒன்றை அனுப்பியிருந்தார். இதற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து மணிப்பூர் விவசாயிகளுக்கு ரூ.38.06 கோடி இழப்பீட்டை மத்திய அரசு வழங்க […]

Read More