கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 30 ஆகஸ்ட், 2024 07:45 AM
வெளியிடப்பட்டது: 30 ஆகஸ்ட் 2024 07:45 AM
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 30 ஆகஸ்ட் 2024 07:45 AM
ராவல்பிண்டி: வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இந்நிலையில் கடைசி மற்றும் 2வது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்த போட்டிக்கான 12 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிடி நீக்கப்பட்டுள்ளார். அதேவேளையில் லெக் ஸ்பின்னரான அப்ரார் அகமது, வேகப்பந்து வீச்சாளர் மிர்ஹம்சா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமனில் முடிக்க பாகிஸ்தான் அணி நெருக்கடியுடன் களமிறங்குகிறது.
லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
எங்களைப் பின்தொடரவும்
தவறவிடாதீர்!