Business

Educational Backgrounds of the World’s Top 10 Billionaires: From Elon Musk to Mark Zuckerberg | உலக பணக்கார்களின் உட்சபட்ச படிப்புகள்..!

Educational Backgrounds of the World’s Top 10 Billionaires: From Elon Musk to Mark Zuckerberg | உலக பணக்கார்களின் உட்சபட்ச படிப்புகள்..!


உலக பணக்காரர்களாக இருக்கும் எலோன் மஸ்க் முதல் மார்க் ஜுக்கர்பெர்க் வரை, உலகின் டாப் 10 பணக்காரர்கள் எவ்வளவு படித்தவர்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.


Education of top billionaires : தொழிலில் ஜாம்பவான்களாக இருக்கும் உலகப் பணக்காரர்கள் டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் முதல் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க் வரை எவ்வளவு படித்திருக்கிறார்கள் தெரியுமா? பார்க்கலாம் வாங்க..


1
/10

செர்ஜி பிரின் -

கூகுளின் இரண்டாவது இணை நிறுவனர், செர்ஜி பிரின், கல்வியாளர்கள் குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரது தற்போதைய மொத்த சொத்து மதிப்பு 118.2 பில்லியன் டாலர்கள் (ரூ.9 லட்சம் கோடி). மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் கணிதத்தில் பட்டம் பெற்றவர். பின்னர் அவர் பெல்லோஷிப்பில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பட்டதாரி படிப்பில் சேர்ந்தார், 1995 ஆம் ஆண்டு இதே பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

2
/10

வாரன் பஃபெட் -

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபெட். ஆனால் இவர் படிக்க செல்லும்போது ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் இவருக்கு அட்மிஷன் கொடுக்கவில்லை.  இருப்பினும் தொடர்ந்து படித்த அவர் 19 வயதில் வணிக நிர்வாகத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். ஹார்வர்டில் இருந்து நிராகரிக்கப்பட்ட பிறகு, பஃபெட் கொலம்பியா பிசினஸ் ஸ்கூலில் பொருளாதாரத்தில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றார்.

3
/10

ஸ்டீவ் பால்மர் -

2000 முதல் 2014 வரை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்டீவ் பால்மர் படிக்கும்போது, பில் கேட்ஸ் தங்கியிருந்த ஹாஸ்டல் அறையில் வசித்து வந்தார். இருவரும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருந்தனர். பால்மர் 1977 ஆம் ஆண்டில் கணிதம் மற்றும் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டத்துடன் மேக்னா கம் லாட் பட்டம் பெற்றார். MBA படிப்பை Stanford Graduate School of Business-ல் பயின்றார்.

4
/10

மார்க் ஜுக்கர்பெர்க் -

மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உளவியல் மற்றும் கணினி அறிவியலில் பட்டம் பெற்றிருக்கிறார். இந்த படிப்பை படிக்கும்போதே அவர் ஃபேஸ்புக் ஆரம்பிப்பதை யோசித்திருக்கிறார்.

5
/10

லாரி பேஜ் -

123.3 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 10 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் உலகின் எட்டாவது பெரிய பணக்காரராக இருக்கும் கூகுள் இணை நிறுவனர் லாரி பேஜ், 1995 ஆம் ஆண்டு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் கணினி பொறியியலில் இளங்கலைப் பட்டத்தையும், 1998 ஆம் ஆண்டு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டத்தையும் முடித்தார்.

6
/10

லாரி எலிசன் (Larry Ellison)-

உலகின் முதல் 10 பில்லியனர்கள் பட்டியலில் ஆரக்கிளின் இணை நிறுவனரும் செயல் தலைவருமான லாரி எலிசனின் பெயர் உள்ளது. அவரது மொத்த சொத்து மதிப்பு $143.8 பில்லியன் (சுமார் ரூ.11 லட்சம் கோடி). எலிசன் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தாலும் தனிப்பட்ட காரணங்களால், அந்த படிப்பை முழுமையாக கூட முடிக்கவில்லை. அதன்பின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் கணிதம் பிரிவில் பட்டம் பெற்றார்.

7
/10

ஜெஃப் பெசோஸ் -

ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரது முன்னாள் மனைவி மெக்கென்சி ஸ்காட் ஆகியோர் அமேசான் நிறுவனத்தை பெல்லூவில் வாடகைக்கு எடுத்த கேரேஜில் நிறுவினர். அப்போது அவர் உலகின் மிகப் பெரிய வணிகங்களில் ஒன்றுக்கான அடித்தளத்தை அமைத்திருக்கிறோம் என்பதை அவரே அறிந்திருக்கமாட்டார். அவரின் சொத்து மதிப்பு  சுமார் ரூ. 16 லட்சம் கோடி. 1982-ல், பெசோஸ் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் தேர்ச்சி பெற்றார். 2008 ஆம் ஆண்டு கார்னகி மெலன் பல்கலைக்கழகம் பெசோஸுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் கௌரவ டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டது.

8
/10

எலோன் மஸ்க் -

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க், 1.98 பில்லியன் டாலர் (சுமார் ரூ.16 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் உலகின் இரண்டாவது பணக்காரர் ஆவார். அவர் முதலில் 1990 இல் ஒன்டாரியோவின் கிங்ஸ்டனில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திற்குச் சென்றார், அங்கு அவர் பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் இயற்பியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றுள்ளார்.

9
/10

பில் கேட்ஸ் -

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் 1973 ஆம் ஆண்டு லேக்சைட் பள்ளியில் பட்டம் பெற்றார். இவர் ஏற்கனவே மெரிட் ஸ்காலராகவும் இருந்தார். அதே ஆண்டில் கணிதம் மற்றும் கணினி அறிவியலில் முதுகலை பட்டப்படிப்பில் சேர்ந்தார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தனது படிப்பை விட்டுவிட்டு தனது நண்பரான பால் ஆலனுடன் தனது சொந்த கணினி மென்பொருள் நிறுவனத்தைத் தொடங்கினார்.

10
/10

பெர்னார்ட் அர்னால்ட்  -

பெர்னார்ட் அர்னால்ட் சமீபத்தில் எலோன் மஸ்க்கை பின்னுக்குத் தள்ளி உலகின் மிகப் பெரிய பணக்காரர் ஆனார். அவரது மொத்த சொத்து மதிப்பு 221 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.18 லட்சம் கோடி). அவரது நிறுவனம் LVMH ஆடம்பர பொருட்களை உற்பத்தி செய்கிறது. பெர்னார்ட் அர்னால்ட் பிரான்சின் எகோல் பாலிடெக்னிக் பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றவர்.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *