தேசியம்

Corona XE மாறுபாடு: மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்


மத்திய சுகாதார அமைச்சகம் (MoHFW) மற்றும் மும்பை மாநகராட்சி ஆகியவை நிறுவனத்தின் புதிய துணை மாறுபாடு XE தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது குறித்து மாறுபட்ட தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. மும்பை மாநகராட்சியின் கூற்றுக்களை மத்திய சுகாதார அமைச்சகம் மறுத்துள்ளது, நோயாளியின் மாதிரியின் மரபணு வரிசைமுறை, XE மாறுபாட்டை உறுதிப்படுத்தவில்லை என்று கூறியுள்ளது.

எனினும், இந்த விவகாரத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய ஆராய்ச்சி அமைப்பான INSACOG அமைப்பின் உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | Covid 4th Wave: இந்தியாவின் நான்காவது அலை! WHO விடுக்கும் எச்சரிக்கை

முன்னதாக புதன்கிழமை, கிரேட்டர் மும்பையின் முனிசிபல் கார்ப்பரேஷன், மரபணு வரிசைமுறையின் கீழ் சோதனைக்கு அனுப்பப்பட்ட 230 மாதிரிகளில், புதிய துணை மாறுபாடு XE தொற்று பாதிப்பு இருப்பதாக ஒரு சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொற்று பாதிப்பு தொடர்பாக, எந்த அறிகுறியும் இல்லாத, 50 வயது பெண் ஒருவருக்கு புதிய துணை மாறுபாடு XE தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. புதிய மாறுபாட்டை உறுதிப்படுத்துவதற்காக மாதிரி தேசிய உயிரியல் மருத்துவ மரபியல் நிறுவனத்திற்கு (NIBMG) அனுப்பப்படும் என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்த புதிய மாறுபாடு குறித்து, உலக சுகாதார அமைப்பு (WHO) கூறியது, சில நாட்களுக்கு முன்பு ‘XE’ மாறுபாடு இங்கிலாந்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும், ஒமைக்ரானின் ba.2 மாறுபாட்டை விட XE துணை மாறுபாடு 10% அதிகமகா பரவும் தன்மையைக் கொண்டுள்ளது.

ஒமிக்ரான் மாறுபாட்டின் ஒரு பகுதி XE பிறழ்வு தற்போது கண்காணிக்கப்படுகிறது என்று WHO கூறுகிறது. ஓமிக்ரானின் அறிகுறிகளில் காய்ச்சல், தொண்டை வலி, இருமல், சளி, தோல் எரிச்சல் போன்றவை அடங்கும். UK சுகாதாரத் துறை XD, XE மற்றும் XF ஆகியவற்றை ஆராய்ந்து வருகிறது. XD வகை ஓமிக்ரானின் BA.1 மாறுபாட்டில் இருந்து பெறப்பட்டது. புதிய மாறுபாடு XE ஆக இருந்தால், அது ஒமைக்ரானின் துணை வகை BA.2 மாறுபாட்டை விட சுமார் 10 சதவீதம் வீரியம் உள்ளது என உகல சுகாதார அமைப்பு கூறுகிறது.

மேலும் படிக்க | நான்காவது அலை கோவிட்: அலட்சியப்படுத்த வேண்டாம், இதுதான் புதிய அறிகுறிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரவும்.

முகநூலில் @ZEETamilNewsடிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிகிராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android இணைப்பு – https://bit.ly/3hDyh4G

ஆப்பிள் இணைப்பு – https://apple.co/3loQYeR

Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published.