மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் பிஎம் கிசான் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இரண்டாம் ஆட்சி காலத்தில், கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர் இது. மேலும், இந்தாண்டின் முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடராகவும் உள்ளது.
பரபரப்பான அரசியல் சூழல் மத்தியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். பொதுவாக, வருமான வரி சலுகை, ரெப்கோ வட்டி விகிதம், தொழில் வளர்ச்சி, இளைஞர் திறன் மேம்பாடு, நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு போன்றவைக்காக பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அந்த வகையில், விவசாயிகளுக்கும் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளுக்கு ”பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி”(PM Kisan) திட்டத்தின் மூலம் மத்திய அரசால் வருடத்திற்கு ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை வருடத்திற்கு மூன்று தவணைகளாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 8.5 கோடி விவசாயிகள் பலனடைந்துள்ளனர். இதுவரை 15 தவணைகளில் சுமார் 2.75 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளின் உதவித்தொகையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அந்த வகையில், இடைக்கால பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.6,000 இருக்கும் உதவித்தொகையை ரூ.8,000 உயர்த்த வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். இதன் மூலம் நாட்டின் விவசாயிகள் மேலும் பயன்பெறுவர் என கூறப்படுகிறது.
சிறந்த வீடியோக்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
- First Published :