தேசியம்

Breaking News: ஜம்முவில் மாதா வைஷ்ணோ தேவி ஆலய கூட்ட நெரிசல்! 6 பேர் பலி!


புதுடெல்லி: மாதா வைஷ்ணோ தேவி பவனில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததாக, ஆலயத்தின் சமூக சுகாதார மையத்தின் பிளாக் மருத்துவ அதிகாரி டாக்டர் கோபால் தத் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், பலி எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

கிடைத்த தகவல்களின்படி பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன, காயமடைந்தவர்கள் நரைனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், பலர் காயமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.


ஜம்மு காஷ்மீரின் திரிகூட மலையில் அமைந்துள்ள மாதா வைஷ்ணோ தேவி கோவில் பகுதியில் நேற்று கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது.

இதையும் படியுங்கள் | புத்தாண்டின் முதல் நாளில் செய்யக்கூடாதவை!

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி ஆலயத்தில் இன்று அதிகாலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. புத்தாண்டு தினத்தன்று பக்தர்கள் கூட்டம் (புத்தாண்டு 2022) அதிகமாக இருந்ததே இந்த சம்பவத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

வழக்கமாக பக்தர்கள் அதிகம் வரும் இந்த பிரசித்தி பெற்ற கோவிலில், வைரஸ் பரவல் காரணமாக மார்ச் மாதம் 2020 முதல் ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி வரை பக்தர்களின் வருகைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

வைஷ்ணோ தேவி கோவில் சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பெயர்பெற்ற புனிதத் தலமாகும், இந்த கோவில் இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணோ தேவி மலையில் அமைந்துள்ளது.

மேலும் படிக்கவும் | 2022 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் : பதவி உயர்வு, அங்கீகாரம் கிடைக்கும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரவும்.

முகநூலில் @ZeeHindustan Tamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android இணைப்பு – https://bit.ly/3hDyh4G

ஆப்பிள் இணைப்பு – https://apple.co/3loQYeR

.Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *