நாவல் பழம் பா வகைகளில் நன்மை பயக்க கூடியது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நாவல் பழ இலையில், டீ தயாரிட்த்ஹு குடிப்பதை வழக்கமாக கொண்டால், பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.
உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களை கட்டுப்படுத்த பல வகையான மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த மருந்துகளைத் தவிர, உங்கள் உணவில் சில இயற்கை வைத்தியங்களின் உதவியையும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இதனால், இயற்கை முறையில் தீர்வு கிடைக்கும்.
1
/8
நாவல் பழ இலை டீயில், எல்.டி.எல் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளை குறைக்கும் தன்மை உள்ளது. மேலும் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகளின் நல்ல மூலமாகும், நாவல் பழ இலை தேநீரை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு அபாயங்களைக் குறைக்கலாம்.
2
/8
நாவல் பழ இலையை கொண்டு தேநீர் தயாரிக்க, முதலில் 1 கப் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 2 முதல் 3 ஜாமுன் இலைகளைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். அதன் பிறகு இந்த தண்ணீரை வடிகட்டி அதில் சிறிது தேன் கலந்து குடிக்கவும்.
3
/8
உடல் பருமனை குறைக்க நாவல் பழ இலை டீயை உட்கொள்ளலாம். இது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை எரிக்கும். உடல் எடை கட்டுக்குள் இருக்கும்
4
/8
நாவல் பழ இலையில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.
5
/8
நாவல் பழ இலைகளில் பாக்டீரியா எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. இது உங்கள் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவியாக இருக்கும்.
6
/8
நாவல் பழ இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரை உட்கொள்வதன் மூலம், கல்லீரலில் உள்ள அழுக்குகளையும் நச்சுக்களையும் நீக்கலாம்.
7
/8
இன்றைய வாழ்க்கை முறை காரணமாக அதிகரித்து வரும் மன அழுத்தத்தை குறைக்க, நாவல் பழ இலைகளில் செய்யப்பட்ட தேநீரை உட்கொள்ளலாம்.
8
/8
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.