
Last Updated : 15 Nov, 2023 06:44 AM
Published : 15 Nov 2023 06:44 AM
Last Updated : 15 Nov 2023 06:44 AM

சென்னை: சர்வதேசத் திரைப்பட விழாக்களில் 70-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ள ‘சரஸ்’ என்ற படத்தை ஜூட் பீட்டர் டேமியான் என்பவர் இயக்கியுள்ளார். இவர் சார்ட்டட் அக்கவுன்டன்ட். இதுபற்றி அவர் கூறும்போது, “முதலில் ‘சஷ்தி’ என்ற அரைமணி நேரப் படத்தை இயக்கினேன். இதில் செம்மலர் அன்னம், லிசி ஆண்டனி உட்பட பலர் நடித்தனர். கடந்த ஆண்டு 35 சர்வதேச பட விழாக்களில் 75 க்கும் மேற்பட்ட விருதுகளை இது பெற்றது. அடுத்து ‘சரஸ்’ குறும்படத்தை இயக்கினேன். இதில் நீலிமா ராணி, என்.ஸ்ரீகிருஷ்ணா, வினைதா சிவகுமார், மாஸ்டர் சஞ்சீவ் ஆகியோர் நடித்தனர். இதுவும் பட விழாக்களில் 70-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.
FOLLOW US
தவறவிடாதீர்!