தேசியம்

7 வது ஊதியக்குழு: ஊழியர்களின் அடிப்படை ஊதிய அதிகரிப்பு பற்றிய முக்கிய செய்தி


7 வது ஊதியக்குழு சமீபத்திய செய்தி இன்று: ஜூலை 1, 2021 முதல், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அதிகரித்த அகவிலைப்படியைப் பெறத் தொடங்கினர். மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலை நிவாரணத்தில் இருந்த (Dearness Relief) முடக்கம் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு நீக்கப்பட்டது.

எனினும், அரசு ஊழியர்கள் ஒரு விதத்தில் சிறிய ஏமாற்றத்தையும் அடைந்தனர். மத்திய அரசு ஊழியர்களின் மாதாந்திர அடிப்படை சம்பளத்தை உயர்த்துவது குறித்து பரிசீலிக்க அரசு மறுத்துவிட்டது. அதாவது, ஊழியர்களின் மாதாந்திர அடிப்படை சம்பளத்தில் உயர்வு இருக்காது என்பது இப்போது தெளிவாக உள்ளது.

அடிப்படை ஊதியத்தை அதிகரிக்கும் எண்ணம் இல்லை

ஜூலை 28 அன்று, மாநிலங்களவையில், நிதி அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்ட பதிவில், மத்திய அரசு வழங்கப்பட்ட திட்டத்தையும் பரிசீலிக்கவில்லை என்று கூறினார். 7 வது மத்திய ஊதியக் குழுவின் (7 வது ஊதியக்குழு) பரிந்துரைகளின் அடிப்படையில் திருத்தப்பட்ட ஊதிய அமைப்பில் ஊதியத்தை நிர்ணயிப்பதற்காக மட்டுமே அனைத்து வகை ஊழியர்களுக்கும் 2.57 என்ற பிட்மெண்ட் பாக்டர் ஒரே மாதிரியாக அமல்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறினார்.

நிதி அமைச்சர் மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்தார். இதில், 7 வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், பிட்மெண்ட் பாக்டரின் படி அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண முடக்கம் நீக்கப்பட்ட பிறகு ஊழியர்களின் மாதாந்திர அடிப்படை ஊதியத்தை அதிகரித்தது பற்றி மத்திய அரசு இப்போது பரிசீலிக்கிறதா என்ற கேள்வி கேட்கப்பட்டது.

மேலும் படிக்க: 7 வது ஊதியக்குழு மிகப்பெரிய முடிவு: இவர்களின் குடும்ப ஓய்வூதியம் உயர்த்தப்பட்டது

இப்போது அகவிலைப்படி 31% ஆக அதிகரிக்கும்

முன்பு மத்திய ஊழியர்கள் 17% அகவிலைப்படியை பெற்றார்கள். ஜூலை 1, 2021 முதல், இது 28% ஆக உயர்த்தப்பட்டது. ஊழியர்களின் அகவிலைப்படி ஜனவரி 2020 இல் 4 சதவிகிதம், பின்னர் ஜூன் 2020 இல் 3 சதவிகிதம் மற்றும் ஜனவரி 2021 இல் 4 சதவிகிதம் அதிகரித்தது.

இப்போது ஊழியர்கள் 2021 ஜூன் மாதத்திற்கான அகவிலைப்படி தரவுகளுக்காகக் காத்திருக்கிறார்கள். இந்தத் தரவு விரைவில் வெளியிடப்படலாம். ஏஐசிபிஐ தரவுகளின்படி, 7 வது ஊதியக் குழுவின் கீழ் ஜூன் 2021 இல் அகவிலைப்படி (டிஏ உயர்வு) 3 சதவிகிதம் அதிகரிக்கப் போகிறது. இது நடந்தால், மொத்த டிஏ 31 சதவீதமாக அதிகரிக்கும். செப்டம்பர் மாத சம்பளத்துடன் 31% அகவிலைப்படி கட்டணம்.

அகவிலைப்படியுடன் HRA- வும் அதிகரித்தது

அகவிலைப்படி அதிகரிப்பதோடு, மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவை (HRA) அதிகரிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. விதிகளின்படி, அகவிலைப்படி 25%-ஐ விட அதிகமாகிவிட்டதால் எச்.ஆர்.ஏ அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வீட்டு வாடகை கொடுப்பனவையும் 27% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

செலவினத் துறை 7 ஜூலை 2017 அன்று ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில் அகவிலைப்படி 25%ஐ தாண்டும்போது HRA- வும் திருத்தப்படும் என்று கூறப்படுகிறது. ஜூலை 1 முதல், அகவிலைப்படி 28% ஆக அதிகரித்துள்ளது, எனவே எச்.ஆர்.ஏ-ஐ திருத்துவதும் அவசியமாகிறது.

மேலும் படிக்க: 7 வது ஊதியக்குழு: இந்த ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி, அதிகரித்தது ஓய்வூதியம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிரவும்

முகநூலில் @ஜீ ஹிந்துஸ்தான் தமிழ் மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் !!

Android இணைப்பு – https://bit.ly/3hDyh4G

ஆப்பிள் இணைப்பு – https://apple.co/3loQYeR

.Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *