
அதாவது, புதிய நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் மொத்த கடன் தொகையில் 60% வாங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த தொகையில் பெரும்பாலானவை மூலதனச் செலவினங்களுக்காகப் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூலதனச் செலவினத்தின் பலன் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் என்று அரசாங்கம் மதிப்பிடுகிறது. மத்திய அரசின் பட்ஜெட் ஆவணங்களின்படி, 2022-23ல் அரசு பத்திரங்கள் மூலம் ரூ.14,95,000 கோடி கடன் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் இந்திய அரசு ரூ.12,05,500 கோடி கடன் வாங்கியுள்ளது.
புதிய நிதியாண்டில் வாரத்திற்கு 32000 கோடி முதல் 33000 கோடி ரூபாய் என மொத்தம் 26 வார தவணைகளில் 14.31 லட்சம் கோடி ரூபாய் வாங்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தக் கடன்கள் 2-ஆண்டு, 5-ஆண்டு, 7-ஆண்டு, 10-ஆண்டு, 14-ஆண்டு, 30-ஆண்டு மற்றும் 40-ஆண்டுகளுக்கான பத்திரங்களில் பெறப்படும். குறிப்பாக, கடன் தொகையில் பெரும் பங்கு 14 ஆண்டு, 30 ஆண்டு மற்றும் 40 ஆண்டு பத்திரங்கள் மூலம் பெறப்படும்.