தமிழகம்

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! – குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை


தமிழகம் முழுவதும் தினசரி தவிர்க்க முடியாத நிகழ்வாக, போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 5 பேர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமி பாலியல் வன்கொடுமை

கோவை துடியலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). கூலி வேலை செய்து வந்தார். கடந்த 2019ம் ஆண்டு அதே பகுதியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக செல்வராஜ் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு கோவையில் உள்ள மற்றொரு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். விசாரணை முழுமையாக நிறைவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

செல்வராஜ்

அதன்படி, செல்வராஜுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், குற்றவாளிக்கு கூடுதலாக ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமன்ற நீதிபதி குலசேகரன் தீர்ப்பளித்தார்.

தீர்ப்பு

இதையடுத்து குற்றவாளிக்கு விரைந்து தண்டனை வழங்கிய துடியலூர் போலீசாருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published.