தேசியம்

2 வயது குழந்தையோடு பள்ளிக்குச் செல்லும் சிறுமிக்கு பிறந்தது விடிவுகாலம்!


இணையத்தில் சில தினங்களாக பள்ளிச்சிறுமி ஒருவர் மடியில் ஒரு பிள்ளையை வைத்துக்கொண்டு பள்ளி பாடத்தை கவனிக்கும் புகைப்படம் ஒன்று உலவந்து கொண்டிருந்தது.

அதனை அண்மையில் மணிப்பூர் மாநிலத்தின் மின்சாரம், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிஸ்வஜித் சிங் கண்டுள்ளார்.

மேலும் படிக்க | பெட்ரோல் டீசல் விலை குறையுமா; நிதி அமைச்சர் கூறுவது என்ன..!!

பின்னர் அந்த புகைப்படத்தில் உள்ள சிறுமி பற்றி விசாரித்துள்ளார். அதில் மாநில அச்சிறுமி மணிப்பூர் தலைநகரமான இம்பால் நகரில் இருப்பதாக தெரிந்தது.

மேலும் படிக்க | கணவனாக இருந்தாலும் மனைவியின் சம்மதம் இல்லாமல் உறவு கொள்வது பாலியல் குற்றம்

மேலும் அச் சிறுமி, நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி என்றும், சிறுமி தனது சகோதரியை தன் மடியில் வைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்று பாடம் படிக்கும் தகவலும் வந்தது.

இதையடுத்து அமைச்சர் பிஸ்வஜித் சிங், அச்சிறுமி கல்லூரி படிப்பை முடிக்கும் வரையிலான செலவை தானே ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் “கல்வியின் மீதான மாணவியின் அர்ப்பணிப்பு என்னை வியக்க வைத்தது! அவளது பெற்றோர் விவசாயத்திற்காக வெளியே சென்றுவிட்டனர். வீட்டில் தனியாக 2 வயது சிறுமியை விட்டுவிட்டு பள்ளிக்கு வரமுடியாத சூழலில் இருக்கும் அவள், தன் 2 வயது தங்கையை மடியில் வைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்று பாடம் கற்றுவருகிறாள்” என்று பதிவிட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரவும்.

முகநூலில் @ZEETamilNewsடிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிகிராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android இணைப்பு – https://bit.ly/3hDyh4G
ஆப்பிள் இணைப்பு – https://apple.co/3loQYeR

Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published.