Sports

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை… 5 ஆவது இடத்திற்கு பின்தங்கியது இந்திய அணி…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை… 5 ஆவது இடத்திற்கு பின்தங்கியது இந்திய அணி…


இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் நேற்று தோல்வி அடைந்தது. இதையடுத்து உலகக் கோப்பை டெஸ்ட் தொடருக்கான தரவரிசை பட்டியலில் 5ஆம் தேதிக்கு சென்றுள்ளது இந்திய அணி.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நேற்று முடிந்தது. இதில் 2 ஆவது இன்னிங்ஸில் 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடினர். இருப்பினும் இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 2-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்தியா வெற்றி பெற எளிதான இலக்கை இங்கிலாந்து அணி நிர்ணயித்த போதிலும், இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டம் காரணமாக அணி தோல்வியை தழுவியது.

இந்த தோல்வியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இந்திய அணி 5-ஆவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. இந்த போட்டிக்கு பின்னர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

விளம்பரம்

ஆஸ்திரேலிய அணி 55 வெற்றி சதவீதத்துடன் முதல் இடத்திலும், தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து அணி மூன்றாவது இடத்திலும், வங்கதேச அணி 4 ஆவது இடத்திலும் உள்ளது. இங்கிலாந்து உடனான தோல்வியின் மூலம் இந்திய அணியின் வெற்றி சதவீதம் 43.33 ஆக குறைந்த நிலையில், 5 ஆவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.

சிறந்த வீடியோக்கள்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: .

  • முதலில் வெளியிடப்பட்டது:



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *