உலகம்

ஹவாய் பெண் அதிகாரி மெங் வஞ்சு விடுவிக்கப்பட்டார்; சீனாவில் சிறப்பான வரவேற்பு


பெய்ஜிங்: சீன மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஹவாய் நிறுவனத்தில் பெண் நிர்வாகி மெங் வஞ்சு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கனடா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ஹவாய் நிறுவனத்தின் தலைவர் ரென் ஜெங்க்பாயின் மகளும், நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியுமான மெங் வஞ்சு, 49, 2018 இல் கனடாவில் கைது செய்யப்பட்டார். அமெரிக்கா மீதான பெரும் மோதலை அடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய தமிழ் செய்திகள்

கடந்த மூன்று ஆண்டுகளாக சிறையில் உள்ள மெங் வஞ்சுவை விடுவிக்க சீனா முயற்சித்து வருகிறது. அமெரிக்காவுடனான சமரச ஒப்பந்தத்தைத் தொடர்ந்து மெங் விடுவிக்கப்பட்டார். சீன அரசு அனுப்பிய சிறப்பு விமானத்தில் அவர் நேற்று ஷென்சென் விமான நிலையத்திற்கு வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த தகவலை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *