
சண்டிகர்: ஹரியாணா மாநிலம் நூ மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) ஊர்வலத்தின் மீது சிலர் கற்களை வீசி கடுமையாகத் தாக்குதல் நடத்தினர். இந்தக் கலவரத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், நூ கலவரம் தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ மம்மன் கான் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். வன்முறை சம்பவத்தில் கானுக்கு நேரடி தொடர்பு உள்ளதாகவும் அதனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, நூ மாவட்டத்தில் நேற்று காலை முதல் 2நாட்களுக்கு செல்போன் இணைய சேவை மற்றும் எஸ்எம்எஸ் சேவை முடக்கப்பட்டுள்ளது. மம்மன்கான் ஃபெரோஸ்பூர் தொகுதி எம்எல்ஏ ஆவார். அவர் தனி இடத்தில் வைக்கப்பட்டுள்ளார் என்று மாவட்ட போலீஸ் டிஎஸ்பி சதீஷ்குமார் தெரிவித்தார்.