National

ஸ்ரீநகர் | புகழ்பெற்ற தால் ஏரியில் 5 படகு வீடுகள் தீக்கிரை | Massive fire destroys at least 5 houseboats in Srinagar’s iconic Dal Lake

ஸ்ரீநகர் | புகழ்பெற்ற தால் ஏரியில் 5 படகு வீடுகள் தீக்கிரை | Massive fire destroys at least 5 houseboats in Srinagar’s iconic Dal Lake


ஸ்ரீநகர்: காஷ்மீரின் ஸ்ரீநகரில் புகழ்பெற்ற தால் ஏரியில் உள்ள சர்வதேச கவனம் பெற்ற படகு வீடுகள் சில தீக்கிரையாகின.

இன்று (சனிக்கிழமை) காலை தால் ஏரியின் வாயில் எண் 9ல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு வீடு ஒன்றில் பிடித்த தீ மளமளவென அருகிலிருந்த வீடுகளுக்கும் பரவியுள்ளது. இதில் மொத்தமாக 5 வீடுகள் எரிந்து நாசமாகின. இச்சம்பவம் குறித்து படகு வீட்டின் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், “இன்று அதிகாலை 4.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 படகு வீடுகள் சேதமடைந்ததோடு 6 குடியிருப்பு குடிசைகளும் எரிந்தன” என்றார்.

தால் ஏரியின் படகு வீடுகள் வரலாற்று முக்கியத்துவமும் கலாச்சார மதிப்பும் கொண்டவை. தீ விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இதனால் மற்ற படகுகள் தப்பின. மேலும் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு வெளிநாட்டுப் பயணிகள் சிலரைக் காப்பாற்றினர்.படகுகள் எரிந்ததால் ஏற்பட்ட நிதி இழப்பு பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் எனத் தெரிகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன்ர்.





Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *