உலகம்

ஷாங்காயில் அதிகரிக்கும் கொரோனா; கட்டுப்பாடுகளின் தீவிரம்


ஷாங்காய்: சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சீனாவின் ஷாங்காய் நகரில் 26 லட்சம் பேர் ஊரடங்கு உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது புதிய வகை ஒமேகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள இந்த நகரில், யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடுமையான ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படுவதால், கடந்த இரண்டு நாட்களாக தினசரி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தற்போது ஷாங்காய் இன்டர்நேஷனல் எக்ஸ்போ சென்டர் வளாகம் தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. புதிய நோயாளிகளுக்காக இங்கு 15 ஆயிரம் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் வசிக்கும் குடிமக்கள் நியூக்ளிக் அமில சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

விளம்பரம்



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published.