தேசியம்

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அரசு மகளிர் விடுதியா?


டெல்லி : மகளிர் தாங்கும் விடுதி பற்றாக்குறை குறித்து திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. சென்னை போன்ற பெரு நகரங்களில் வேலைக்கு செல்லும் பெண்கள் பாதுகாப்பாக தங்கி கொள்வதற்கென்று மகளிர் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தனியார் மகளிர் விடுதிகளில் கட்டணங்கள் அதிகமாக இருப்பதால் வேலைக்கு செல்லும் பெண்கள் சிரமப்படுகின்றனர். அதுவே அரசு விடுதிகளில் தங்கினால் அவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் சிரமம் இருக்காது.

மேலும் படிக்கவும் | இனி தமிழில்தான் இனிஷியல்: பள்ளி கல்லூரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு

அதனால் அரசு மகளிர் விடுதிகளை அதிகரிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைக்கின்றனர். இந்நிலையில் மகளிர் தங்கும் விடுதிகள் பற்றாக்குறையாக இருப்பதாக திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் கூறினார். அதுகுறித்து அவர் மத்திய அரசிடமும் கேள்வி எழுப்பினார். அதில் நாட்டில் வேலைக்கு செல்லும் பெண்களின் நலனுக்காக உள்ள விடுதிகளில் கடுமையாக நிலவி வரும் பற்றாக்குறையை நீக்க மத்திய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது? மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை மகளிர் விடுதிகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது? இந்த மகளிர் விடுதிகள் எத்தனை செயல்பாட்டுக்கு வருகின்றன? என்று கேள்வி எழுப்பினார். இந்நிலையில் இவரின் கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

இதுகுறித்து, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணி கூறுகையில், “வேலைக்கு செல்லும் மகளிருக்கான தங்கும் விடுதிகளில் இதுவரை எதுவும் பற்றாக்குறை ஏற்படவில்லை. மேலும் சரியாக இன்றைய நிலவர கணக்கெடுப்பின்படி, மொத்தமாக இந்தியாவில் 497 மகளிர் விடுதிகள் நல்ல நிலையில் இயங்கி வருகின்றன. தற்போது 67 மகளிர் விடுதிகள் செயல்பாட்டுக்கு வந்து இயங்கி கொண்டு இருக்கின்றது”, என்று கூறினார்.

மேலும் படிக்கவும் | ஐஏஎஸ் அதிகாரிகளின் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க உத்தரவு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரவும்.

முகநூலில் @ZeeHindustan Tamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்கவும், இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்.

Android இணைப்பு: https://bit.ly/3hDyh4G

ஆப்பிள் இணைப்பு: https://apple.co/3loQYeR

.Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *