தமிழகம்

வேலூர்: பொன்னையாற்று பாலத்தில் விரிசல் புனரமைப்பு! – ரயில் சேவை மீண்டும் தொடங்கியது


வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே திருவலம் – முகுந்தராயபுரம் ரயில் நிலையம் வழியாக பொன்னையாறு செல்கிறது. ஆற்றின் குறுக்கே 1865 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியின் போது கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலம் 156 வருடங்களாக இன்னும் நிற்கிறது.

இந்நிலையில் கடந்த மாதம் பெய்த கனமழையால் பொன்னையாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நவம்பர் 19ம் தேதி 65,000 கனஅடி தண்ணீர் வந்தது. இதன் காரணமாக ரயில்வே பாலத்தின் 38 மற்றும் 39வது தூண்களுக்கு இடையே உள்ள வளைவு பகுதியில் விரிசல் ஏற்பட்டது. கடந்த 23ம் தேதி விரிசல் கண்டுபிடிக்கப்பட்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேம்பாலம் சீரமைக்கும் பணி

அதைத் தொடர்ந்து, அன்று மாலை முதல்… ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அரக்கோணம்-காட்பாடி மார்க்கத்தில் இயக்கப்படும் சில ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டன. ஒரு சில ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன. இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். விரிசல் ஏற்பட்ட ரயில்வே மேம்பாலத்தை தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு ஆய்வு செய்தது. இதையடுத்து, மூன்று நாட்களாக மிகுந்த சிரமத்திற்கு இடையே, சீரமைப்பு பணி இரவு, பகலாக முழு வீச்சில் நடந்தது.

.Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *