14/09/2024
Business

வெளிநாடு பயணமா? ஏர்டெல், ஜியோ, வி.ஐ; இதில் எது பெஸ்ட் ரோமிங் திட்டம்?

வெளிநாடு பயணமா? ஏர்டெல், ஜியோ, வி.ஐ; இதில் எது பெஸ்ட் ரோமிங் திட்டம்?


ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியாவின் சர்வதேச ரோமிங் திட்டங்கள் இந்தியர்கள் தங்கள் மொபைல் எண்களை செயலில் வைத்துக்கொண்டு உலகம் முழுவதும் (160 க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாடுகளில்) பயணிக்க முடியும். இந்த திட்டங்கள் மூலம் ஹை-ஸ்பீடு இன்டர்நெட் பயன்படுத்தலாம், வெளிநாடுகளில் தனியாக சிம் கார்டு வாங்கத் தேவையில்லை.

2024-ல் குறைந்த விலை சர்வதேச ரோமிங் திட்டம்

ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ ஆகியவை சர்வதேச ரோமிங் திட்டங்களை டேட்டா மற்றும் காலிங் வசதியுடன் வருகிறது. ஜியோவின் மிகவும் மலிவு திட்டமானது ஒரு நாளைக்கு ரூ.499 இல் தொடங்குகிறது, 24 மணிநேரத்திற்கு 250 எம்பி டேட்டா மற்றும் 100 நிமிட அழைப்புகளை இந்தியாவிற்கு வழங்குகிறது. 14 நாட்கள் வேலிடிட்டி, 1 ஜிபி டேட்டா மற்றும் இந்தியாவிற்கு அழைப்பு மேற்கொள்ள 150 நிமிட அழைப்புகளுடன் ரூ.1,499க்கான திட்டத்தையும் வழங்குகிறது.

ஏர்டெல்லின் மிகவும் மலிவான சர்வதேச ரோமிங் திட்டமானது ஒரு நாளைக்கு ரூ.648 செலவாகும், 500 எம்பி டேட்டா மற்றும் இந்தியாவிற்கு 100 நிமிட அழைப்புகளை வழங்குகிறது. 899 ரூபாய்க்கு 10 நாள் திட்டமும் உள்ளது, இதில் 1 ஜிபி டேட்டா மற்றும் இந்தியாவிற்கு 100 நிமிட அழைப்பு இருக்கும்.

வோடபோன் ஐடியாவின் ஒரு நாள் திட்டத்திற்கு ரூ. 695 செலவாகும் மற்றும் இந்தியாவிற்கு 120 நிமிட அழைப்புகளுடன் 1 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. ரூ.995க்கு, 500 எம்பி டேட்டா மற்றும் 150 நிமிட அழைப்புடன் 7 நாட்கள் வேலிடிட்டியைப் பெறலாம். சர்வதேச ரோமிங் திட்டங்களில் மற்ற நெட்வொர்க்கை விட யோ குறைந்த செலவில் அதிக நன்மைகளுடன் திட்டங்களை வழங்குகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *