தமிழகம்

“விவசாய இயந்திரங்களுக்கு பெட்ரோல், டீசல் மானியம் வழங்க வேண்டும்!” – வழக்குரைஞர்


நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் அய்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். மத்திய அரசின் கேபினட் செயலாளர், மத்திய வேளாண் அமைச்சக செயலாளர், மத்திய நிதி அமைச்சக செயலாளர், தமிழக அரசின் தலைமை செயலாளர் ஆகியோர் மீது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

விவசாய இயந்திரங்களின் பயன்பாடு

அந்நிலையில், “நாட்டின் வளர்ச்சியில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. விவசாயம் என்பது உணவு உற்பத்தி மற்றும் விநியோகத்தை மட்டும் சார்ந்து இருப்பது மட்டுமல்லாமல் நாடு முழுவதும் ஏராளமான மக்களுக்கு வேலை வாய்ப்பையும் வழங்குகிறது.

விவசாயத் தொழிலாளர்களின் கூலி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளால் விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லை. விவசாயம் என்பது நேரத்தைச் சார்ந்து இருப்பதால், சரியான நேரத்தில் வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. அதனால் விவசாய இயந்திரங்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறைக் கொள்கை 2021-22ல் விவசாயத்திற்கு அதிக இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் 70% விவசாயிகளிடம் இயந்திரங்கள் உள்ளன. நெல், பருத்தி, நிலக்கடலை, கரும்பு, தென்னை, தேயிலை, காபி போன்றவற்றை பயிரிட்டு அறுவடை செய்ய இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர்.

.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *