வணிகம்

விவசாயிகளுக்கு இனி 4000 ரூபாய்! ஜனவரியில் பணம் வருமா?


பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது. 2000/- ஒரு தவணையில் மொத்தம் 3 தவணைகள் ரூ. 6000 / – ஆண்டுக்கு. இந்த பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதன் மூலம் இடைத்தரகர்களின் சுரண்டல் தடுக்கப்படுகிறது.

பிஎம் கிசான் இத்திட்டத்தின் விவசாயிகளுக்கு இதுவரை 9 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. 10வது தவணை பதிவு செய்த விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். 10வது தவணை டிசம்பர் 15ம் தேதிக்குள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் பணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 2022 ஜனவரியில் பணம் கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது.

2000 ரூபாய் எப்போது கிடைக்கும்? நீங்களே சோதித்துக்கொள்ளலாம்… இதோ எளிதான வழி!!
இந்நிலையில் விவசாயிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக அடுத்த தவணையாக 4000 ரூபாய் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்திய விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், பிஎம் கிசான் திட்டத்தின் நிதியுதவியை இரட்டிப்பாக்க ஆலோசனை நடந்து வருகிறது. அதன்படி, விவசாயிகளுக்கு இனி பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.12,000 நிதியுதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முடிவு இறுதி செய்யப்பட்டால் விவசாயிகளுக்கு அடுத்த தவணையாக ரூ.4,000 நிதியுதவி கிடைக்க வாய்ப்புள்ளது. 10வது தவணை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், பணம் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *