தேசியம்

விமானம் மூலம் ஆப்கானில் இருந்து தாயகம் திரும்பிய 129 இந்தியர்கள்


ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாகவே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 1000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐநா கட்டணம். தலிபான்களை சமாளிக்க முடியாமல் அரசு படங்கள் திணறி வருகின்றன.

தலிபான்கள் வசம் ஆப்கானின் (ஆப்கானிஸ்தான்) பெரும்பகுதி சென்றுவிட்ட நிலையில், இதில் அதிக பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது பெண்களே. தாலிபான்கள் மிக விரைவாக ஆப்கானிஸ்தானின் சிறிய பகுதிகளைக் கைப்பற்றினர். ந்தூஸ், தலுகான், நிம்ருஸ், செபர்கான், சாரஞ், சமங்கன், புல்-இ-கும்ரி, தக்கார் உட்பட 10 மாகாணங்களின் தலைநகரங்களை கைப்பற்றிய தலிபான் அமைப்பினர் தொடர்ந்து கந்தகாரை கைப்பற்றினர். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலையும் (காபூல்) தாலிபான்கள் கைப்பற்றினர்.

மேலும் படிக்க | ஆப்கானிஸ்தான் தலிபான் விதி: ஆப்கானில் தாலிபான் ஆட்சி தொடங்கியது, ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறினார்

மேலும் ஆப்கானிஸ்தான், தாலிபான்களின் கட்டுக்குள் அதிகாரப்பூர்வமாக செல்வது உறுதியானது. சுமார், 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் மீண்டும் கைப்பற்றியுள்ளனர்.

இதற்கிடையில் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இனிவரும் நாள்களில் ஆப்கனில் நிலைமை மோசமடையும் பட்சத்தின் ஆப்கனில் வசிக்கும் மற்ற இந்தியர்களையும் இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு நிலைமையை கவனித்து வருகிறது.

தொடர்ச்சியான ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்காக, ஏர் இந்தியா நிறுவனம் சிறப்பு விமானத்தை இயக்கியது. இதன்படி ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சென்றது. அங்கிருந்து 129 பேருடன் புறப்பட்ட அந்த விமானம் டெல்லி வந்து சேர்ந்தது.

மேலும் படிக்க | தாலிபான் வசமாகும் ஆப்கானிஸ்தான்; இந்தியர்களை தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிரவும்

முகநூலில் @ஜீ ஹிந்துஸ்தான் தமிழ் மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் !!

Android இணைப்பு – https://bit.ly/3hDyh4G
ஆப்பிள் இணைப்பு – https://apple.co/3loQYeR

.Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *