சென்னை: விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தின் சிறப்பு புரொமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நாளை (செப்.5) படம் வெளியாக உள்ள நிலையில், புரமோ வீடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.
புரமோ வீடியோ எப்படி?: 34 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பிரேம்ஜியின் குரலில் ‘GOAT’ ஒலிக்க, யுவனின் பின்னணி இசையில் அடுத்தடுத்து காட்சிகள் வேகமாக நகர்கின்றன. துள்ளல் இசையுடன் ஆக்ஷனும், நடனும் என மின்னல் வேகத்தில் விறுவிறுப்பாக வீடியோ கட் செய்யப்பட்டுள்ளது. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
தி கோட்: விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் விஜய் 2 வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது.
ANNE VARAR VAZHI VIDU #ThalapathyThiruvizha starts from Tomorrow #GOATReleasePromo ( Last update ) pic.twitter.com/KXLLLnKAKb
— Archana Kalpathi (@archanakalpathi) September 4, 2024