
விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 45 படகுகள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சிலவிஷமிகளின் செயல்களால் எரிந்து நாசமானது. இதில் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந் திருப்பதாக கூறப்படுகிறது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் நேற்று முன்தினம் இரவு படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அப்போது திடீரென நள்ளிரவு 11.30 மணிக்கு அந்தபடகுகள் தீப்பிடித்து எரிந்தன. இதையடுத்து தீயணைப்புப் படையினருக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயை அணைக்க மீனவர்கள் முயற்சி செய்தனர். சம்பவ இடத்துக்கு வந்ததீயணைப்பு படையினர் தீயை முற்றிலுமாக அணைத்தனர்.