Business

வாட்ஸ்அப்பில் குவியும் Spam மெசேஜ்கள்… மெட்டா நிறுவனத்தின் புதிய அம்சம்

வாட்ஸ்அப்பில் குவியும் Spam மெசேஜ்கள்… மெட்டா நிறுவனத்தின் புதிய அம்சம்


வாட்ஸ்அப்பில் தெரியாத நபரிடமிருந்து ஸ்பேம் செய்தியினை பிளாக் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

Spam கால்கள்

இன்றைய காலம் டிஜிட்டல் மயமாகியுள்ளதால், பல சைபர் மோசடிகளும் அதிகரித்து வருகின்றது. நமது மொபைல் எண்கள் எப்படியாவது மோசடி செய்பவர்களின் கைக்கு சென்று விடுகின்றது.

உடனே இன்சுரன்ஸ், கடன் தொகை கொடுக்கின்றோம் என்று மாறி மாறி போன்று செய்து வருகின்றனர். இந்த S(am கால்களைப் போன்று Whatsapp செயலிலும் அறிமுகம் இல்லாத தொலைபேசி எண்களில் இருந்து, ஸ்பேம் செய்திகள் நமக்கு தொந்தரவை கொடுக்கும். மேலும் இதன் மூலம் நாம் சைபர் மோசடிக்கும் ஆளாக நேரிடலாம்.

மெட்டா எடுத்த முடிவு

மெட்டா நிறுவனம் அவ்வப்போது தங்களது பயனர்களுக்கு தேவையான புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து வரும் Spam மெசேஜ்களை வராமல் தடுப்பதற்கு விரைவில் ஒரு அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது.

ஸ்பேம் மெசேஜ்களை தடுக்க உதவும் அம்சம் சோதனை கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. Whatsapp கணக்கின் தனி உரிமை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்து இது உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

வாட்ஸ்அப்பில் குவியும் Spam மெசேஜ்கள்... மெட்டா நிறுவனத்தின் புதிய அம்சம் | Whatsapp Spam Message How To Block

ஆனால் இவ்வாறு Spam மெசேஜ்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் நேரத்தில், போனின் மெமரி மற்றும் பிராசஸஸ்ரையும் பாதிக்குமாம்.

அதுமட்டுமில்லாமல் ஸ்பேம் மெசேஜ் காரணமாக நமது இணைய டேட்டாவும் தேவையில்லாமல் குறைந்துவிடுவதால், அவசர காலத்தில் டேட்டா இல்லாமல் சிரமத்தினை சந்திக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

விரைவில் பிளாக் செய்யலாம்

வாட்ஸ்அப்பில் அறிமுகம் இல்லாத கணக்குகளிலிருந்து வரும் செய்தியினை பிளாக் அன்நோன் மெஸ்ச்சேஜஸ் (Block unknown accounts messages) என்ற அம்சம் பிளாக் செய்யும்.

புதிய அம்சம் அறிமுகமான பின், அதற்கான செட்டிங்கை ஆன் செய்த பின்னர் ஸ்பேம் செய்திகளில் இருந்து விடுதலை பெறலாம்.

வாட்ஸ்அப்பில் குவியும் Spam மெசேஜ்கள்... மெட்டா நிறுவனத்தின் புதிய அம்சம் | Whatsapp Spam Message How To Block

இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்த பின்பு அறிமுகம் இல்லாத கணக்கிலிருந்து வியாபார நோக்கில் அனுப்பப்படும் Spam கணக்குகளை கண்டறிந்து தானாகவே பிளாக் செய்துவிடுமாம். நீங்கள் அந்த ஸ்பேம் கணக்கை தனியாக பிளாக் செய்ய வேண்டிய அவசியமில்லை.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் வாட்ஸ்அப் சேனல் இல் இணையுங்கள் இப்போது பின்பற்றவும்



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *