
திருநெல்வேலி/ சென்னை: வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி மூலமாக தொடங்கி வைத்த அதே நேரத்தில், இந்த ரயில்கள் இயக்கப்படும் அனைத்து நிலையங்களிலும் கேக் வெட்டியும், இனிப்புகளை பரிமாறியும் தொடக்க விழா உற்சாகமாக நடந்தது.
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நடந்த விழாவில், தெலங்கானா – புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய தகவல், ஒலிபரப்பு துறை இணை அமைச்சர்
எல்.முருகன், ஞானதிரவியம் எம்.பி., எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், அப்துல் வகாப், முன்னாள் அமைச்சர் டிபிஎம் மைதீன்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நெல்லையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட வந்தே பாரத் ரயிலில் ஆளுநர் தமிழிசை, மதுரை வரை பயணித்தார். ‘‘வந்தே பாரத் ரயில் மூலம் நெல்லையில் இருந்து மதுரைக்கு
2 மணி நேரத்தில் சென்றுவிட முடியும். பிரதமருக்கு மனமார்ந்த நன்றி’’ என்று அவர் கூறினார்.