தேசியம்

வங்கிகள் வேலை நாட்கள்: 2022 ஜனவரியில் 15 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும்


வங்கி வேலை நாட்கள் ஜனவரி 2022: இன்று தொடங்கிய புத்தாண்டின் முதல் மாதமான ஜனவரியில் வங்கிகள் 15 நாட்கள் மட்டுமே செயல்படும். இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு, பிராந்திய விடுமுறை உட்பட விடுமுறை தினங்கள் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றவாறு மாறுபடும். அதிகபட்சமாக மொத்தம் 16 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். தமிழ்நாட்டில் 19 நாட்கள் வங்கிகள் செயல்படும்.

2022 ஜனவரி மாதத்தின் வங்கிகளின் விடுமுறை பட்டியல் இது…

நாட்டில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு வங்கிகளும் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகள் வழக்கம் போல் இயங்காது.

வாரந்திர விடுமுறையைத் தவிர, வேறு பல விடுமுறைகள் காரணமாக ஜனவரி மாதத்தில் பல்வேறு மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும். இருப்பினும், வங்கி விடுமுறை நாட்களில் ஆன்லைன் வங்கி சேவைகள் செயல்படும்.

நாளை தொடங்கும் புத்தாண்டின் முதல் மாத வங்கிகளின் விடுமுறை (வங்கி விடுமுறைகள்) தெரிந்துக் கொண்டால், திட்டமிடுவதற்கு சுலபமாக இருக்கும்.

ஜனவரி 1 : ஆங்கிலப் புத்தாண்டு (நாடு முழுவதும் விடுமுறை)

ஜனவரி 2 : ஞாயிற்றுக்கிழமை; அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை

ஜனவரி 4: லோசூங் (சிக்கிம் மாநிலம்)

ஜனவரி 8: இரண்டாவது சனிக்கிழமை; அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை

ஜனவரி 9 : ஞாயிற்றுக்கிழமை; அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை

ஜனவரி 11: மிஷனரி தினம் (மிசோரம்)

ஜனவரி 12: சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் (கொல்கத்தா)

ஜனவரி 14: மகர சங்கராந்தி/பொங்கல் (பல மாநிலங்களுக்கு விடுமுறை)

ஜனவரி 15: மகர சங்கராந்தி விழா/மகே சங்கராந்தி/சங்கராந்தி/பொங்கல்/திருவள்ளுவர் தினம் (புதுச்சேரி, ஆந்திரா, தமிழ்நாடு)

ஜனவரி 16 : ஞாயிற்றுக்கிழமை; அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை

ஜனவரி 18: தைப்பூசம் (சென்னை)

ஜனவரி 22: நான்காவது சனிக்கிழமை; அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை

ஜனவரி 23 : ஞாயிற்றுக்கிழமை அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை

ஜனவரி 26: குடியரசு தினம்; நாடு முழுவதும் வங்கிகளுக்கும் விடுமுறை

ஜனவரி 30 : ஞாயிற்றுக்கிழமை; அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை

ரிசர்வ் வங்கி வெளியிட்ட மத்திய ஜனவரி 2022 விடுமுறைப் பட்டியல்,பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 9 விடுமுறைகள் (வங்கி விடுமுறைகள்) திட்டமிடப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிறு கூட்டினால் மொத்த விடுமுறை நாட்களின் எண்ணிக்கை 16 ஆகிவிடும். தமிழகத்தில் மொத்தம் 12 நாட்கள் வங்கிகள் செயல்படாது.

மேலும் படிக்கவும்: வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரிய அடி: ஏப்ரல் 1 முதல் OTP பெறுவதில் சிக்கல் வரும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரவும்.

முகநூலில் @ZeeHindustan Tamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android இணைப்பு – https://bit.ly/3hDyh4G

ஆப்பிள் இணைப்பு – https://apple.co/3loQYeR

.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *