உலகம்

வங்கதேச கப்பல் விபத்தில் 40 பேர் பலி; 150 பேர் காயமடைந்தனர்


டாக்கா: வங்கதேசத்தில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 பேர் பலியாகினர். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
‘MV, Abigail 10 Launch’ என்ற உல்லாசக் கப்பல் நேற்று இரவு நமது அண்டை நாடான வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவில் இருந்து புறப்பட்டது. மூன்று அடுக்குகளைக் கொண்ட சுகந்தா நதியில் 800க்கும் மேற்பட்ட மக்கள் பயணித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த கப்பல் நேற்று அதிகாலை 3:00 மணியளவில் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சுகந்தா ஆற்றின் குறுக்கே சென்றது. அப்போது கப்பலின் இன்ஜின் அறையில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவியதால், அதில் இருந்த பயணிகள் அலறியடித்தபடி ஆற்றில் குதித்தனர். சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர்.

3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். உயிரிழந்த 40 பேரின் உடல்களை மீட்புப் படையினர் மீட்டனர். அவர்களில் 9 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் 150க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டனர். இதில் 72 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

விசாரணை

இதனிடையே மாயமான மற்றொரு பயணியை தேடும் பணி தொடர்கிறது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க வங்கதேச அரசு ஏழு பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்குள் விசாரணையை முடித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கப்பலில் கொள்ளளவை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

விளம்பரம்

.Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *