Business

ரூ.1.1 கோடி விலையில் புதிய CLE கேப்ரியோலெட் மாடலை வெளியிட்டிருக்கிறது மெர்சிடீஸ்

ரூ.1.1 கோடி விலையில் புதிய CLE கேப்ரியோலெட் மாடலை வெளியிட்டிருக்கிறது மெர்சிடீஸ்


வெளிப்புறத் தோற்றம்:

வெளிப்புறத் தோற்றம்:

மெர்சிடீஸின் MRA (Modular Rear Architecture) பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டு இந்த CLE மாடலை உருவாக்கியிருக்கிறது மெர்சிடீஸ். இதே பிளாட்ஃபார்மில் தான் தற்போது விற்பனையில் இருக்கும் C-கிளாஸ் உருவாக்கப்பட்டதுடன், அடுத்த வெளியாகவிருக்கும் புதிய தலைமுறை E-கிளாஸ் மாடலும் உருவாக்கப்படவிருக்கிறது.

E-கிளாஸ் கூபே மற்றும் கேப்ரியோலெட் மாடல்களிடமிருந்து சில டிசைன் எலமெண்ட்களைப் பெற்றிருக்கிறது புதிய CLE கேப்ரியோலெட். ஷார்க் நோஸ் எஃபெக்டுடன் கூடிய பெரிய கிரில், நீளமான பானெட், ஆட்டோமேட்டிக் ஃபேப்ரிக் கூடு ஆகிய அம்சங்களைப் பெற்றிருக்கிறது இந்தக் கார்.

இந்தியாவில் வெளியாகியிருப்பது AMG லைன் வேரியன்டாக இருக்கும் நிலையில், ஸ்போர்ட்டியான பம்பர்களையும் பெற்றிருக்கிறது.

உட்புற வசதிகள்:

உட்புற வசதிகள்:

C-கிளாஸில் கொடுக்கப்பட்டிருக்கும் அதே டிசைன் மற்றும் வசதிகள் தான் இந்த CLE கேப்ரியோலெட் மாடலிலும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 12.3 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 11.9 இன்ச் போர்ட்ரெய்ட் ஸ்டைல் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளே, 2+2 சீட்டிங் லேஅவுட் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

மேலும் புதிதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இதன் முன்பக்க சீட்களில், ஹெட்ரெஸ்ட், ஹீட்டிங் மற்றும் 4 வே லம்பர் சப்போர்ட் ஆகிய வசதிகள் ஸ்டாண்டர்டாகக் கொடுக்கப்பட்டிகுக்கின்றன. இத்துடன் பின் இருக்கை பயணிகளின் தலைக்கென தனி ஏர்பேக்கையும் ஸ்டாண்டர்டாகக் கொடுத்திருக்கிறது மெர்சிடீஸ்.

இன்ஜின்:

இன்ஜின்:

இந்த CLE கேப்ரியோலெட் மாடலில் நான்கு சிலிண்டர்கள் கொண்ட, 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டிருக்கிறது. 48V மைல்டு-ஹைபிரிட் சிஸ்டத்துடன் கூடிய இந்த இன்ஜினானது, 258hp பவர் மற்றும் 400Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது.

அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கும் இந்த இன்ஜின் மணிக்கு 100 கிமீ வேகத்தை 6.6 நொடிகளில் எட்டுகிறது. இந்த இன்ஜினுடன் 9 ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

விலை மற்றும் போட்டியாளர்கள்:

விலை மற்றும் போட்டியாளர்கள்:

இந்த CLE கேப்ரியோலெட் கன்வர்டிபிள் மாடலை ரூ.1.1 கோடி விலையில் இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது மெர்சிடீஸ். ரூ.90.90 லட்சம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் BMW Z4 மாடலுக்குப் போட்டியாக வெளியாகியிருக்கிறது இந்த மாடல். போர்ஷே 718 பாக்ஸ்டர் மாடலுக்கு மாற்றாக சற்று விலை குறைந்த மாடலாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *