National

ராகுல் காந்தியுடன் ஹேமந்த் சோரன் சந்திப்பு: தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை | Hemant Soren meets Kharge, Rahul Gandhi in Delhi, discusses assembly poll strategy

ராகுல் காந்தியுடன் ஹேமந்த் சோரன் சந்திப்பு: தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை | Hemant Soren meets Kharge, Rahul Gandhi in Delhi, discusses assembly poll strategy


புதுடெல்லி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால் ஆகியோரை நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது, சட்டப்பேரவை தேர்தல் வியூகம்தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: மகாராஷ்டிராவுடன் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கும் சேர்த்து தேர்தல் தேதி குறித்தஅறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்றஎதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில், இண்டியா கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் அல்லது தொகுதி பங்கீடு என எதுவாக இருந்தாலும் தேர்தல் வியூகத்தை முன்கூட்டியே வகுக்க வேண்டியுள்ளது அவசியமாகி உள்ளது. ஆர்ஜேடியை தவிர, காங்கிரஸ் இரண்டாவது முக்கியகூட்டணிக் கட்சியாக உள்ளது.

எனவே, அதனுடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டைப்போல் இல்லாமல், இந்த தேர்தலில் இடதுசாரிகளும் கூட்டணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதற்கான ஆலோசனையும் தொடங்கியுள்ளது. இந்த முறை அதிக இடங்களில் போட்டியிட உரிமை கோருவோம். இவ்வாறு அந்த தலைவர் தெரிவித்தார்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *