
சென்னை: தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டல அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பயணிகள் ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசுகளில் ரசாயனப் பொருட்கள் கலந்திருப்பதால் சிறிய தீப்பொறிகூட மிகப் பெரிய விபத்தை ஏற்படுத்தும்.
எனவே, ரயில்கள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் பயணிகள் பட்டாசுகளை எடுத்துச் செல்லக் கூடாது. மீறி எடுத்துச் சென்றால் ரயில்வே சட்டம் 1989, பிரிவு 67, 164 மற்றும் 165-ன் கீழ் ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். அல்லதுஇரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
எனவே, பயணிகள் ரயில்களில் பட்டாசுகளை கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.தடையை மீறி யாராவது ரயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் 139 என்ற ரயில்வே உதவி எண்ணை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.