Cinema

ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினி | Actor Rajinikanth Diwali wishes to his fans

ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினி | Actor Rajinikanth Diwali wishes to his fans


சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து கூறியுள்ள அவர், வரும் பொங்கல் அன்று, லால் சலாம் படத்தின் மூலம் அனைவரையும் சந்திப்பதாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், “அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். வரும் பொங்கல் அன்று, லால் சலாம் படத்தில் உங்களை சந்திக்கிறேன். மொய்தீன் பாய்.. குர்தாபீஸ்” என்று அதில் அவர் தனது வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, தீபாவளி தினமான இன்று சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது வீட்டின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.

பண்டிகை தினங்களில், நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டின் வெளியே திரண்டிருக்கும் ரசிகர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அந்தவகையில், தீபாவளி பண்டிகை தினமான இன்று சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு அதிகாலை முதலே ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

இன்று காலை தனது வீட்டில் இருந்து வெளியே வந்த ரஜினிகாந்த், வீட்டின் வெளியே காத்திருந்த ரசிகர்களைப் பார்த்து கைகளை அசைத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். அப்போது அங்கு காத்திருந்த ரசிகர்கள் ரஜினிகாந்தைப் பார்த்தவுடன் கோஷங்களை எழுப்பி ஆரவாரம் செய்தனர்.





Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *