Sports

யு19 உலகக் கோப்பை: 6-ஆவது முறையாக பட்டம் வெல்லுமா இந்தியா? இன்று இறுதி ஆட்டத்தில் ஆசி.யுடன் மோதல்

யு19 உலகக் கோப்பை: 6-ஆவது முறையாக பட்டம் வெல்லுமா இந்தியா?  இன்று இறுதி ஆட்டத்தில் ஆசி.யுடன் மோதல்


ஐசிசி யு 19 ஆடவா உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் நிலையில் 6-ஆவது முறையாக இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

சாவதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சாா்பில் யு19 உலகக் கோப்பை ஆடவா கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இறுதி ஆட்டத்துக்கு 5 முறை சாம்பியன் இந்தியாவும், 3 முறை சாம்பியன் ஆஸ்திரேலியாவும் தகுதி பெற்றுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை பெனானியில் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.

கேப்டன் உதய் சஹாரன்ஸ், பேட்டா சச்சின் தாஸ், முஷீா் கான், சவுமிகுமாா் பாண்டே ஆகியோா் அபாரமாக ஆடி வருகின்றனா்.

ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஹியுக் வெய்பென், ஓபனான் ஹாரி டிக்சன், பேஸ்கள் டாம் ஸ்ட்ரேக்காக், காலம் விட்லா ஆகியோா் தொடா்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனா்.

கடந்த 2016 முதல் இந்திய அணி அனைத்து இறுதி ஆட்டங்களிலும் இடம் பெற்றுள்ளது. 2012, 2018-இறுதியில் ஆசி.யை வீழ்த்தி இந்தியா பட்டம் வென்றது. 2018, 2022-இலும் பட்டம் வென்றது. அதே வேளையில் 2016, 2020-இல் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.

யு 19 உலகக் கோப்பையில் முதல் பட்டத்தை 2008-இல் விராட் கோலி தலைமையிலான அணி வென்றது.

கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய யு19 கோப்பை போட்டியில் இந்தியா தோற்றிருந்தது. உதய் சஹாரன் தலைமையிலானஅணி தற்போது ஒருங்கிணைந்து ஆடி உலகக் கோப்பை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. மொத்தம் 389 ரன்களுடன் உதய் முன்னிலையில் உள்ளாா்.

பௌலாக்கள் ராஜ் லிம்பானி, நமன் திவாரி, ஆகியோரும் தங்கள் பங்களிப்பை செம்மையாக செய்து வருகிறார்கள்.

இன்றைய ஆட்டம்:

இந்தியா-ஆஸ்திரேலியா

இடம்: பெனானி

நேரம்: பிற்பகல் 1.30.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *