Cinema

‘மைலாஞ்சி’ படத் தலைப்பு மாற்றம் | mylanji shoot wrapped

‘மைலாஞ்சி’ படத் தலைப்பு மாற்றம் | mylanji shoot wrapped


சென்னை: எழுத்தாளர் அஜயன் பாலா, இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் ‘கன்னிமாடம்’ ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குருப், சிங்கம்புலி , முனீஷ்காந்த், தங்கதுரை உட்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இந்தப் படத்துக்கு ‘மைலாஞ்சி’ என்று தலைப்பு வைத்திருந்தனர். இதே தலைப்பில் வேறொரு படத்தின் தலைப்பும் பதிவு செய்யப்பட்டிருப்பதால், ‘அஜயன்பாலாவின் மைலாஞ்சி’ என்று மாற்றி வைத்துள்ளனர்.

இதுபற்றி அஜயன் பாலா கூறும்போது, “திரைப்படத் தலைப்புகளின் உரிமையை முறைப்படுத்துவது அவசியம். இந்த நடைமுறையில் உள்ள சிக்கல் காரணமாக, ‘மைலாஞ்சி’ என்ற தலைப்பில் வேறு ஒரு படம் திரைக்கு வந்ததால் தலைப்பை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மலைப் பிரதேசத்தைப் பின்னணியாகக் கொண்டு சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசும் காதல் கதையாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது. காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என்றார்.





Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *