
நாகேஷ் நடித்த ‘நீர்க்குமிழி’ மூலம் இயக்குநராக அறி முகமான கே.பாலசந்தர், அடுத்து ‘நாணல்’ என்ற படத்தை இயக்கினார். அவர் மூன்றாவதாக இயக் கிய படம், ‘மேஜர் சந்திரகாந்த்’.
ஜெயலலிதா, முத்துராமன், ஏவி. எம்.ராஜன், நாகேஷ், சுந்தர்ராஜன் உட்பட பலர் நடித்த இந்தப் படத்தை ஏவி.எம் நிறுவனம் தயாரித்தது. கே.பாலசந்தரின் ‘மேஜர் சந்திர காந்த்’ என்ற நாடகத்தைத் தழுவி உருவான படம் இது. நாடகத்தில் மேஜராக நடித்த சுந்தர்ராஜன், திரைப்படத்திலும் அதே கதா பாத்திரத்தில் நடித்தார். படம் வெற்றி பெற்றதாலும் அவர் நடிப்பு பாராட்டப் பட்டதாலும் அவர் பெயரின் முன் னால் ‘மேஜர்’என்ற அடைமொழி தானாக வந்து ஒட்டிக் கொண்டது. இந்தப் படத்தில் நடித்தபோது கே.பாலசந்தருக்கும் ஜெயலலி தாவுக்கும் பிரச்சினை என்கிறார் கள். அவர் கேரக்டர் தற்கொலை செய்துகொள்வது போன்ற காட்சியை அவர் ஏற்கவில்லை என்கிறார்கள். இதனால், பால சந்தர் அவரைதனது அடுத்தடுத்தப் படங்களில் பயன்படுத்தவில்லை.