உலகம்

மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு: 20 பேர் பலி


மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ சிட்டியில் உள்ள ரகசிய காக்பிட்டில் ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பெண்கள் உள்பட 20 பேர் பலியாகினர்.

வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் மெக்சிகோ மாகாணத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல் அதிகமாக உள்ளது. இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு தரப்பினர் ரகசியமாக சேவல் சண்டை நடத்தி வருகின்றனர்.

அப்போது அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று வந்தது. சேவல் சண்டையிடும் பக்கம் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், மூன்று பெண்கள் உட்பட, 20 பேர் கொல்லப்பட்டனர்; 4 பேர் காயம் அடைந்தனர். இது திட்டமிட்ட படுகொலை என்றும், இதற்கு காரணமானவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

விளம்பரம்



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published.