தமிழகம்

முல்லைப்பெரியாறு அணையில் 2 நாட்களாக தண்ணீர் நிறுத்தம்: கிராமங்களில் குடிநீருக்கு சிக்கல்


கூடலூர்-முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால், கூடலூர் அருகே உள்ள கிராமங்களுக்கு 2 நாட்களாக குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், லோயர்கேம்ப் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து கடலூர், கம்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதுதவிர குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி ஆகிய கிராமங்களில் ஆற்றில் நேரடியாக பம்பிங் செய்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அணையில் இருந்து 2 நாட்களாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால், கிராமங்களில் பம்பிங் துண்டிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு பணி முடிந்து பெரியாறு அணையில் இருந்து நாளை (இன்று) தண்ணீர் திறக்கப்படும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *