உலகம்

முதல் டெஸ்ட்: இந்தியா 327 ரன்களுக்கு சுருண்டது


செஞ்சுரியன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. செஞ்சுரியனில், முதல் டெஸ்ட் (கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாள் ‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படுகிறது) நடைபெறுகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்துள்ளது. லோகேஷ் ராகுல் (122), அஜிங்க்யா ரகானே (40) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா தரப்பில் லுங்கிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2வது நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

இன்று 3வது நாள் ஆட்டம் தொடங்கும் போது ராகுல் 123 ரன்களிலும், ரகானே 48 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். ரிஷப் பன்ட், முகமது ஷமி தலா 8, அஸ்வின், ஷர்துல் தாக்கூர் தலா 4, பும்ரா 14, ஷிராஸ் 4 ரன்களுடன் ஆட்டமிழந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் நிகிடி 6, ரபாடா 3, ஜான்சன் 1 ரன் எடுத்தனர். முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா ஒரு விக்கெட் இழப்புக்கு 6 ரன் எடுத்திருந்தது.

விளம்பரம்

.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *