தேசியம்

மீறலுக்குப் பிறகு ட்விட்டரில் இருந்து நீதிமன்றம்: ராகுல் காந்தியின் பதிவை நீக்கினோம், கணக்கை முடக்கினோம் …


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினரான ராகுல் காந்தியும் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் தற்காலிகமாக முடக்கினார். சிறிது நாட்களுக்கு முன் டெல்லியில் 9 வயதான தலித் சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ராகுல் காந்தி சிறுமியின் தாயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கடந்த தனது ட்விட்டரில் வெளியிட்டார்.

போக்சோ சட்டப்படி பாலியல் வன்புணர்வுக்கு ஆளான குடும்பத்தினர் குறித்த புகைப்படங்களை சமூக வலைதளங்கள், பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் வெளியிட தடை உள்ளது. இதை அடுத்து ராகுல்காந்தி விதிகளை மீறி விட்டார் என்று தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியது.

அதன்பின் ட்விட்டர் விதிமுறைகளை மீறியதால் ராகுல் காந்தியின் அந்த பதிவை நீக்கி கணக்கையும் முடக்கியது ட்விட்டர் நிறுவனம். சமூக ஆர்வலர் ஒருவரால் ராகுல் காந்தி மீதும் ட்விட்டர் நிறுவனம் மீதும் நீதிமன்றத்திலும் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு இன்று டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் அமர்வுக்கு வந்தது.

மேலும் படிக்கவும் எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் கண்ணீர் மல்கிய அவைத்தலைவர் வெங்கையா நாயுடு

இந்த வழக்கில் பதில் அளித்த ட்விட்டர் நிறுவனம், ராகுல் காந்தியின் அந்த குறிப்பிட்ட பதிவு ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டு அவருடைய கணக்கும் லாக் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எங்களை எதிர் தரப்பாக சேர்த்து இருக்கக் கூடாது என்று அவர்களின் பக்கம் உள்ள வாதத்தினை முன்வைத்தனர்.

இதற்கு பதில் அளிக்கப்பட்டது நீதிபதிகள், நீங்கள் வேகமாக நடவடிக்கை எடுத்துள்ளீர்கள், சிறப்பு என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர், ட்விட்டர் நிறுவனம் தனது செயல்பாட்டை அதிகாரபூர்வமாக பிரமண பாத்திரம் தாக்கல் செய்து, தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை செப்டம்பர் 27 ம் தேதி தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

மேலும் படிக்கவும் பணம் படைத்தவர்களுக்கு ஒரு சட்டம், இல்லாதவர்களுக்கு ஒரு சட்டம்: நீதிபதி வருத்தம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிரவும்

முகநூலில் @ஜீ ஹிந்துஸ்தான் தமிழ் மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் !!

Android இணைப்பு – https://bit.ly/3hDyh4G

ஆப்பிள் இணைப்பு – https://apple.co/3loQYeR

.Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *