
சியோல்: வடகொரியா மிரட்டினால் அணு ஆயுதம் மூலம் பதிலடி கொடுக்கும் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏவுகணை
விழாவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களின் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. விழாவில், ‘ராணுவ பலம் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும்’ என கிம் ஜாங் உன் வலியுறுத்தினார்.
இந்நிலையில், நேற்று ராணுவ அதிகாரிகளை நேரில் சந்தித்து, அணிவகுப்பை சிறப்பாக நடத்தியதற்காக கிம் ஜாங் உன் பாராட்டு தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: அணு ஆயுதங்களை தொடர்ந்து உருவாக்கி, ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். நமது நாட்டின் நலன்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அல்லது ஆபத்தான முயற்சிகளைத் தடுக்க அணு ஆயுதங்களை முன்கூட்டியே பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் பேசினார்.
சமீபத்தில் தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர், ‘வடகொரியாவின் தாக்குதலை முன்கூட்டியே தடுக்கும் பலம் எங்களிடம் உள்ளது’ என்றார். இதற்கு கிம் ஜாங் உன் பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்கா விதித்த தடைகளை நீக்க வடகொரியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் அணு ஆயுத உற்பத்தியை முற்றிலுமாக கைவிட்டால் மட்டுமே தடையை நீக்க முடியும் என அமெரிக்கா கூறியுள்ளது.
13 சோதனைகள்
இதனால் அமெரிக்காவின் ஆதரவுடன் உள்ள தென் கொரியா மற்றும் ஜப்பானை மிரட்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து நவீன ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. இந்த ஆண்டு வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உட்பட 13 சோதனைகளை நடத்தியுள்ளது.
விளம்பரம்