
சென்னை: மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மார்கழி திங்கள்’ திரைப்படம் வரும் அக்டோபர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மனோஜ் பாரதிராஜா இயக்கியுள்ள ‘மார்கழி திங்கள்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. பாரதிராஜா இயக்கிய 'தாஜ்மஹால்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. அதனைத் தொடர்ந்து ‘அல்லி அர்ஜுனா’, ‘வருஷமெல்லாம் வசந்தம்’, ‘ஈரநிலம்’, ‘சமுத்திரம்’, ‘அன்னக்கொடி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.