தமிழகம்

மதுரை ஆவினில் விஜிலென்ஸ் அதிகாரிகள் குழு விசாரணை; முன்னாள் அமைச்சரை குறிவைக்கவும்


: மதுரை: மதுரை ஆவின் பணி நியமனங்கள் உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து, சென்னை ஆவின் விஜிலென்ஸ் அதிகாரிகள் குழு விசாரணை நடத்தியது.

மதுரையில் டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான ஆவின் அதிகாரிகள் குழுவினர் 2 நாட்களாக விசாரணை நடத்தினர். கொள்முதல் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆவின் அதிகாரிகள் கூறியதாவது: முந்தைய இரு பொது மேலாளர்கள் பதவிக் காலத்தில், முறைகேடு மற்றும் ஊழல் புகார்கள், சென்னை விஜிலென்ஸ் பிரிவுக்கு சென்றது. பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் மற்றும் பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த புகாரை விசாரிக்க அதிகாரிகள் குழு இரண்டு நாட்களாக முகாமிட்டுள்ளது.

இதில் மேலாளர்கள் முதல் ஊழியர்கள் வரை விசாரணை நடத்தப்பட்டது. அவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. தணிக்கை கோப்புகளும் ஆய்வு செய்யப்பட்டு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஊழலில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.

விளம்பரம்

.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *